அங்கோர் வாட் இங்கிருந்தால் அதுவும்கூட உடைக்கப்படலாம்

1 templeஉங்கள் கருத்து   ‘வேறுவழி இல்லை, ஐயா.  பணக்காரர்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமே. அதனால், கோயில் 100 ஆண்டுக்குமுன்  கட்டப்பட்டதோ  1,000 ஆண்டுக்குமுன் கட்டப்பட்டதோ உடைக்க வேண்டுமென்றால் உடைக்கத்தான் வேண்டும்”

முதலில் சுவரைக் கட்டியது இப்போது மையக் கோயில்மீதே கைவைத்து விட்டது டிபிகேஎல்

நூர்டின்: அதிகாரிகளின் செயல் (101ஆண்டு ஸ்ரீமுனிஸ்வரர் ஆலயத்தை உடைத்தது) கொடூரமானது. மேம்பாட்டுக்காகவும் பணத்துக்காகவும் வழிபாட்டு இல்லங்களை உடைத்தெறியக் கூடாது. இஸ்லாம் அதை அனுமதிப்பதில்லை.

 

ஜீன் பியர்: ஆலயம் உடைக்கப்பட்டதை 50 போலீசார் பார்த்துக்கொண்டிருந்தார்களா? பேஷ்! பேஷ்!

சுதந்திர சிந்தனையாளன்: போலீஸ் பணக்கார மேம்பாட்டாளர்களுக்காகத்தான் வேலை செய்வார்கள்போல் இருக்கிறது. குடிமக்களின் போலீஸ் ஆக்கிரமிப்பாளர்களின் கைப்பாவையாகி விட்டது.

பெயரிலி#25558299: இந்தியர்கள் வைத்த நம்பிக்கைக்கு பிஎன் தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக் நல்ல கைம்மாறு செய்துவிட்டார்.

சியாங் மாலாம்: நஜிப் போன்றவர்களை நம்பக்கூடாது. அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே அவருக்குத் தெரியாது.

மூத்தவன்: வல்லான் வகுத்ததே வாய்க்கால். அரசாங்கம் சொன்னதை என்றும் செய்ததில்லை.

நியாயவான்: உணர்ச்சி வசப்படக்கூடாது. இந்து ஆலயங்கள் பெரும்பாலும் புறம்போக்கு நிலங்களில்தான் அமைந்துள்ளன. எனவே, அதிகாரிகள் அவற்றை வசப்படுத்திக்கொள்ளவே விரும்பவர்.

சீனர் ஆலயங்களுக்கு இந்நிலை ஏற்படுவதில்லை. ஏனென்றால், அவை அவர்களின் சொந்த நிலத்தில் உள்ளன. அவற்றில் கைவைத்தால் விட மாட்டார்கள், நீதிமன்றம் செல்வார்கள். எனவே, கோயில் நிர்வாகிகளோ எதிரணி எம்பிகளோ மேற்கொள்ளும் எந்தச் செயலும் பலனளிக்கப் போவதில்லை.

அது சரி, தங்களை அஞ்சா நெஞ்சர்கள் என்றும் சமூகக் காவலர்கள் என்றும் கூறிக்கொண்டு கையைப் பிடித்து முத்தம் கொடுப்பார்களே அந்தத் தலைவர்கள் என்ன ஆனார்கள்?

யுநோ: என்னதான் பேசுங்கள். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

பெயரிலி_40f4: மக்களுக்கு முன்னுரிமையா? ஹப்  செங் நிறுவனத்துக்கு முன்னுரிமையா?

கம்போங் புவா பாலா கதைதான். அங்கே நிலத்தை பிஎன் அரசாங்கம் ஒரு மேம்பாட்டாளருக்கு கமுக்கமாக விற்க வில்லையா?

பெயரிலி #01428088:: பெர்காசாவை ஆதரிக்கும் இந்திய என்ஜிஓ-கள் எங்கே போனார்கள்? அவர்கள் இதை ஆதிரிக்கிறார்களா?

பெர்ட் டான்:  அடுத்த பொதுத் தேர்தலுக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். அது நெருங்கிவரும்போது சில ரொட்டி துண்டுகளைப் போட்டால் போதும். எல்லாம் மறப்போம், மன்னிப்போம் என்று ஆகிவிடும்.

யார்  கண்டது,  கூடுதல் போனசாக இன்னொரு இண்ட்ராப் தலைவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம்.

தலைவெட்டி: நஜிப்பின் 1மலேசியா ஒரு கேலிக்கூத்து என்பதற்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு. பிஎன்னுக்கு இந்தியர்கள் காட்டிய விசுவாமான ஆதரவுக்குக் கிடைத்த வெகுமதி.

வேறுவழி இல்லை, ஐயா.  பணக்காரர்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமே. அதனால், கோயில் 100 ஆண்டுக்குமுன் கட்டப்பட்டதோ 1,000 ஆண்டுக்குமுன் கட்டப்பட்டதோ உடைக்க வேண்டுமென்றால் உடைக்கத்தான் வேண்டும்.

நல்ல வேளை, அங்கோர் வாட், ஸ்டோன்ஹென்ஞ், பிரமிட், சீனப் பெருஞ் சுவர் போன்றவை இங்கில்லை.