நஜிப் அவரின் குரைக்கும் நாய்களை அடக்கி வைக்க வேண்டும்

rockyஅரசாங்கத்துக்கு  ஆதரவாக  செயல்படுபவர்  எனப்  பெயர்பெற்ற  ஒரு  செய்தியாளர்,  பிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக்,  டாக்டர்  மகாதிர்  முகமட்டின்  ஆதரவைத்  திரும்பப்  பெற  சில  ஆலோசனைகளை  முன்வைத்துள்ளார்.

அவற்றுள்  ஒன்று : “குரைக்கும்  உங்கள்  நாய்களை  அடக்கி  வையுங்கள்”.

“இந்த  நாய்கள்  குரைக்கும், எரிச்சலூட்டும்  அதன்பின்  ஓடிப்  போகும். இதனால்  மகாதிர்  எரிச்சலடைவார்.  நஜிப் மீதான அவரது தாக்குதல்  மேலும்  தீவிரமடையும்”, என  ரோக்கி என்ற  பெயரில்  பிரபலமாக  விளங்கும்  அஹிருடின்  அட்டான்  கூறினார்.

மலாய் மெயிலின்  முன்னாள்  தலைமை  செய்தியாசிரியரான  அவர்,  அப்துல்லா  அஹ்மட் படாவி  காலத்தில்  இதே  “குரைக்கும்  நாய்கள்”  மைய  நீரோட்ட  ஊடகங்களைப்  பயன்படுத்தி  மகாதிரைத்  தீயவராகக்  காண்பிக்க  முயன்றதை  அவர்  சுட்டிக்காட்டினார்.

முடிவில் அது அவர்களின்  எஜமானருக்குத்தான்   வினையாக  அமைந்தது.