கிட் சியாங்:பிஎன் கிளந்தானை கைப்பற்றக்கூடும்

Kit Siang Bn retake Kelantanசிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் பாஸ் கட்சி பின்பற்றி நிலையற்ற நடத்தையால் ஏற்பட்டுள்ள எதிர்வினைகளால் பாஸ் ஆளும் கிளந்தான் மாநிலத்தை பாரிசான் நேசனல்  கைப்பற்றக்கூடும் என்று டிஎபி மூட்ஹ்த தலைவர் லிம் கிட் சியாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாஸ் கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ள 4.5 விழுக்காடு வாக்குகள், அது பிகேஆருக்கும் நீட்டிக்கப்படலாம், அம்மாநிலத்திலுள்ள இதர தொகுதிகளில் ஏற்படுமானால் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

நேற்றிரவு பெட்டாலிங் ஜெயாவில், டிஎபி நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசிய கிட் சியாங். “பெங்காலான் குபுபோரில் நடந்தது மாநில அளவில் ஏற்பட்டால், கிளந்தான் கைமாறும்”, என்றார்.

இதன் அடிப்படையில், கிளந்தான் சட்டமன்றத்தில் பக்கத்தானுக்கு 20 இடங்கள்தான் கிடைக்கும். பாரிசான் 25 இடங்களைப் பெரும் என்று அவர் மேலும் கூறினார்.