சைட்: அல்டன்துன்யாவைத் தெரியாது என்பது போதுமானதல்ல

zaidபிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக், அல்டன்துன்யா ஷரீபுவுடன்  தமக்கு  எந்தத்  தொடர்பும்  இல்லை  என்று கூறுவது  போதுமானது  அல்ல  என்கிறார்  முன்னாள்  நடப்பில்  சட்ட  அமைச்சர்  சைட்  இப்ராகிம்.

அல்டன்துன்யாவைக்  கொல்லுமாறு  போலீஸ்  அதிரடிப்  படை  வீர்ர்கள்  சிருல்  அஸ்ஹார்  உமருக்கும்  அஸிலா  ஹட்ரிக்கும்  உத்தரவிட்டது  யார்  என்பதைத்  தெரிந்துகொள்ள  மக்கள்  விரும்புகிறார்கள்  என்று  சைட்  டிவிட்டரில்  கூறினார்.

“திரும்பவும்  கூறுகிறேன்: நஜிப்பின்  மெய்க்காவலர்கள் எதற்காக  அல்டன்துன்யாவைக்  கொன்றார்கள்  என்பதை  அறிய  விரும்புகிறோம். எனக்கு  அவரைத்  தெரியாது  என்பது  அதற்கான  விடை  அல்ல”, என்றாரவர்.

டிவி3 ஒளியேறிய  நஜிப்பின்  நேர்காணல்  தொடர்பில்  சைட்  அவ்வாறு  கூறினார்.

அந்நேர்காணலில், அல்டன்துன்யா  கொலையில்  தொடர்புண்டா  என  நஜிப்பை வினவினார்  நிகழ்ச்சி  நடத்துனர்  ஹம்டான்  அமீர்.

அதற்கு  நஜிப், அல்டன்துன்யாவை  நேராகவோ  மறைமுகமாகவோ  தெரியாது  என  மும்முறை  சத்தியம்  செய்திருப்பதாக  சொன்னார்.