NOW: யாபியம் நிதியைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவுக்கு பிசினஸ் வகுப்பில் பயணம்

nowயாயாசான்  பெம்பாங்குனான்  எக்கோனமி இஸ்லாம்  மலேசியா (யாபியம்),  ஆஸ்திரேலியாவில்  நடத்தப்பட்ட அதன்  நிகழ்வுகளில்  கலந்துகொள்வோர்  பிசினஸ் வகுப்பில்  பயணம்  செய்ய ஏற்பாடு  செய்திருந்ததாம்,  அதற்காக  ரிம70,000  செலவிடப்பட்டதாம்.

இத்தகவலை இன்று  செய்தியாளர்  கூட்டமொன்றில்  வெளியிட்ட  தேசிய  தகவல்  அளிக்கும்  அமைப்பு(என்ஓடபள்யு)  இயக்குனர்  அக்மால்  நசிர், பிரிஸ்பேன்,  சிட்னி,  மெல்பர்ன்  ஆகிய  இடங்களில்  அந்நிகழ்ச்சிகளுக்கு  ஆன  செலவுகளை விவரிக்கும்  ஆவணம் ஒன்றையும்  வழங்கினார்.

“எதற்காக  பிசினஸ்  வகுப்புப்  பயணம்,  யார்  அவர்கள்?”, என்றவர்  வினவினார்.

ஆஸ்திரேலியாவில்  நடத்தப்பட்ட  யாபியம்  நிகழ்வுகளுக்கான  மொத்த  செலவு,  விமானப் பயணச்  சீட்டுகள்  உள்பட,  ரிம218,505  என  அக்மால்  கூறினார்.