அம்பிகா: நஜிப் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டும்

 

ambikaமலேசியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அவலத்திற்கு நஜிப் ரசாக்கின் அமைச்சரவையும் சமமான தவறுகள் செய்திருப்பதால், அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்பிகா வலியுறுத்தினார்.

மலேயாவில் நடந்துகொண்டுடிருக்கும் விவகாரங்களுக்கு நஜிப் மட்டும் குற்றவாளி அல்ல, ஒட்டுமொத்த அமைச்சரவையும் குற்றவாளியாகும் என்றாரவர்.

எதுவுமே பேசாமலிருக்கும் அமைச்சர்கள் அனைவரும் எதுவுமே செய்யாத பாவம் செய்தவர்களாவர் என்று அவர் ஒரு நிதி திரட்டல் நிகழ்ச்சியில் அமெரிக்க நீதித்துறை 1எம்டிபி விவகாரத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கை  பற்றி பேசிய போது இவ்வாறு கூறினார்.