எண்ணத்தில் எழுந்தது

வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.

இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

 

பணம் உள்ளவர்களுக்கு 
பண்டிகை உண்டு. 
பரம ஏழைகளுக்கு ? 

வசதிகள் இருப்பவர்க்கு 
விழாக்கள் உண்டு. 
வீதியில் வசிப்பவர்க்கு ? 

கொண்டாடி மகிழ்வது 
தவறில்லை.. 

விழாக்கள் வருவது 
வாழ்க்கையில் 
வழக்கம் தானே … 

பக்தியுள்ளோர்க்கு 
வாடிக்கையது … 

பகுத்தறிவாளர்க்கு 
வேடிக்கையது.. 

ஆனாலும்வறுமையில் 
வாடுவோரை 
நினைத்திடுங்கள் ! 

இல்லார்க்கு கொடுத்து 
மகிழுங்கள் ! 

ஆதரவற்றோர் 
அகங்குளிர உதவுங்கள் ! 

பசியால் வாடுபவர்களுக்கு 
அன்னமிடுங்கள் ! 

முதியோர் இல்லம் 
சென்று கொண்டாடுங்கள் ! 

எளியோரின் ஏக்கங்களை 
எரித்திட முற்படுங்கள் ! 

ஆடையுமின்றி தவிக்கும் 
வறியோர் உடுத்திட 
ஆடை அளியுங்கள் ! 

கட்டளையில்லை 
கருணை காட்டிடுங்கள் ! 

ஆணயிடவில்லை 
ஆதரவு அளித்திடுங்கள் ! 

வேண்டுகோளாக 
வைக்கிறேன் 
வையத்தில் ஒருவனாக ! 

அன்போடு கேட்கிறேன் 
அகிலத்தில் ஒருவனாக ! 

உள்ளன்போடு கேட்கிறேன் 
உங்களில் ஒருவனாக ! 

-பழனி குமார்

TAGS: