இந்தி பேச வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினர்

ராமேஸ்வரம்: இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இந்தி அல்லது ஆங்கிலம் பேசவில்லை எனக் கூறி துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது இந்திய கடற்படை. இதில் 2 மீனவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இந்திய கடற்படையினரே துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மீனவர்களை துப்பாக்கியால் சுட்ட கடலோர காவல்படை வீரரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அத்துடன் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது எனவும் மீனவர் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: