நஜிப் சிறையிடப்படுவார் என்பது பொய்யான செய்தி: சினார் ஹரபான்

பொதுத்  தேர்தலில்   பிஎன்  தோல்வியுற்றால்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  சிறை  செல்வார்   என்று  சினார்  ஹரியானில்  வெளிவந்ததுபோன்ற  ஒரு  செய்தி  பொய்யானது   என   அந்நாளேடு  கூறியது.

சமூக  வலைத்தளங்களில்   வைரலாகியுள்ள   அச்செய்தியில்  பிரதமரின்  படமொன்று  வெளியிடப்பட்டு     “நான்  தோற்றால்   அன்வார்  இப்ராகிம்போல்   சிறை  செல்வேன்,  சிறையிலிருந்தவாறே   இறந்துபோகவும்  கூடும்” ,  என்று   அவர்  கூறினார்  எனக்  குறிப்பிடப்பட்டிருந்தது.

அது   சினார்   ஹரபான்     செய்தியல்ல     என்று    மறுத்த   அதன்  தலைமைச்   செய்தியாசிரியர்     நோர்டின்   முகம்மட்,    அந்தப்   பொய்யான   செய்தியை   உலவ   விட்டிருப்பவர்கள்   அந்த   நாளேட்டின்  பெயரையும்   அச்செயலுடன்  தொடர்புப்படுத்த  முனைந்திருக்கிறார்கள்  என்றார்.

“அதில்  தேதி  இல்லை,  படத்தில்   சினார்  ஹரபான்  நீரோட்டக்குறியும்  இல்லை”,  என்றாரவர்.

பொய்யான   செய்திகளுக்கு  சினார்  ஹரபான்  பெயர்  அடிக்கடி  பயன்படுத்தப்படுகிறது  என்றாரவர்.

சமூக  ஊடகப்  பயனர்கள்   அச்செய்திகள்  உண்மையானவைதானா  என்பதை   உறுதிப்படுத்திக்கொள்ள   வேண்டும்   என்றவர்  வலியுறுத்தினார்.