வசூலில் பட்டையைக் கிளப்பும் பேட்மேன்…

சென்னை : அக்‌ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோர் நடிப்பில் பால்கி இயக்கத்தில் உருவான ‘பேட் மேன்’ படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழரான அருணாசலம் முருகானந்தம், குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களை உற்பத்தி செய்து சமூக ஆர்வலராகப் பங்காற்றி வருபவர். பெண்களுக்காக நாப்கின் புரட்சி செய்து ‘பத்மஶ்ரீ’ விருது வென்ற அருணாசலம் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கை தான் பாலிவுட்டில் ‘பேட்மேன்’ (Padman) படமாகி இருக்கிறது.

மாதவிடாய் பிரச்னையின் போது பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை குறைந்த விலையில் தயாரித்து கொடுத்த தமிழரான அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு, அதில் முருகானந்தம் ரோலில் அக்‌ஷய் குமார் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்தியா முழுக்க 2750 தியேட்டர்களில் வெளியான இப்படம் முதல்நாளில் மட்டும் ரூ.10.26 கோடி வசூலித்தது. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறுகளில் வசூல் இன்னும் அதிகரிக்க மூன்றே நாளில் ரூ.40.05 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

சுமார் ரூ.70 கோடி பட்ஜெட்டில் தயாரான ‘பேட்மேன்’ இந்தவார முடிவில் அசலைக் கடந்து, லாபத்தைக் கொடுக்கும் என்கிறார்கள். அருணாசலம் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கைக் கதையை தமிழில் எடுக்க யாரும் முன்வராதபோது, பாலிவுட்டில் படமாகி லாபம் ஈட்டுவது பெரிய விஷயம் தான். இதற்கு அந்தப் படத்தின் மீதான புரொமோஷனே முக்கியக் காரணம்.

tamil.filmibeat.com