மதுரை அரசரடியில் முதல் அரசியல் மாநாடு… கமல்ஹாசன் அறிவிப்பு!

சென்னை: கமல்ஹாசனின் முதல் அரசியல் மாநாடு மதுரையில் உள்ள அரசரடி என்ற இடத்தில் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் ஜனவரி மாதம் 16ம் தேதி இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். பிப்ரவரி 21-ந் தேதி தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் அதே நாளில் மதுரையில் அரசியல் மாநாடு நடத்த இருக்கிறார். இந்த முதல் அரசியல் மாநாடு மதுரையில் அரசரடி என்ற இடத்தில் நடக்கும். அதே பிப்ரவரி 21ம் தேதி அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இந்த அரசியல் சுற்றுப்பயணத்திற்கு நாளை நமதே என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

tamil.oneindia.com