ஜிஇ14 : இந்திய வாக்காளர்கள் ம.இ.கா.-உடன் இருப்பர்

மலேசியர்கள் அனைவரும், 14-வது பொதுத் தேர்தலுக்கான (ஜிஇ14) நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஜிஇ14 நெருங்கிவரும் வேளையில், மலாய் இனத்திற்கான அம்னோவின் ஆதரவையும் போராட்டங்களையும் மலாய்க்காரர்கள் மறந்துவிட மாட்டார்கள் என, ஆளுங்கட்சியின் தலைமையான அம்னோ கூறியுள்ளது.

டிஏபி-யில் சலித்துபோன சீனர்கள், ஜிஇ14-ல் மீண்டும் மசீச வேட்பாளர்களை ஆதரிப்பர் என்று மலேசிய சீனர் சங்கம் அறிவித்துள்ளது.

அதேவேளை, இந்தியர்கள் தங்கள் பின்னால் உள்ளனர், ஜிஇ14-ல், அவர்களில்  80 விழுக்காட்டினர் தங்கள் வேட்பாளர்களை ஆதரிப்பார்கள் என்று மார்தட்டி கொண்டுள்ளது ம.இ.கா.

இதற்கிடையில், பக்காத்தான் ஹராப்பான் மாற்று கருத்தைக் கொண்டுள்ளது. பெர்சத்துவும் அமானாவும் மலாய்க்காரர்களின் செல்வாக்கைப் பெற்றுள்ளதால், பாஸ் ஆதரவாளர்களான மலாய்க்காரர்களை ஈர்க்கக்கூடிய சக்தியைக் கொண்டுள்ளதாக ஹராப்பான் கூறுகிறது.

அதேசமயம், பிகேஆர் மற்றும் டிஏபி-உம், நகர்ப்புற வாக்காளர்களை, குறிப்பாக சீன வாக்காளர்களைக் கவரமுடியும் என்ற கருத்தைக் கொண்டுள்ளன.

இதன்வழி, பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களும், இதுவரை பாரிசான் நேசனல் பயன்படுத்திய ஒரே சூத்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பாரிசான் மக்களை இனவாரியாக பிரித்தாளுகிறது என இதுவரை குற்றஞ்சாட்டி வந்த லிம் கிட் சியாங் போன்ற மூத்தத் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற இறுதியில் பிஎன் வழியை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

இங்கு ஒரு விஷயம் புலப்படுகிறது, ‘மலேசியா மலேசியர்களுக்கானது’ என்ற கூற்று நம் நாட்டிற்கு ஏற்றது அல்ல என்பதை, இறுதியாக கிட் சியாங் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

எழுத்தாளரின் கருத்து சரியாக இருந்தால், பக்காத்தான் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான விருப்பம் வெற்றி பெறாது.

இங்கு இன்னொரு பிரச்சனை என்னவென்றால், மலாய்க்காரர்கள் ஹராப்பானுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள், அவர்கள் மலாய்த் தலைவர்கள் அல்லது அம்னோ தலைமையிலான பி.என்.-னுக்கே ஆதரவு கொடுப்பர்.

இந்தச் சூழ்நிலையில், சீனர்கள் ஹராப்பான் அல்லது டிஏபி-க்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளனர். புத்ராஜெயாவைக் கைப்பற்ற வேண்டும் எனும் டிஏபி-யின் கனவு, மலாய் வாக்காளர்களின் ஆதரவு இன்றி நிறைவேறுமா?

அதேவேளை, இந்தியர்கள் உறுதியாக ஹராப்பானுக்கு வாக்களிக்க மாட்டார்கள். தங்களை பிரதிநிதிக்கும் ம.இ.கா.-வுக்கு ஆதரவாக இருக்க அவர்கள் முடிவெடுத்துள்ளனர், இது மறுக்க முடியாத உண்மை.

அனைத்து மட்டங்களிலான, மலேசிய சமுதாயத்தின் நலனுக்காக டிஏபி உருவாக்கப்பட்டது. பக்காத்தானில் மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது, டிஏபி பழமையான கட்சியாகும். பக்காத்தானில் இருக்கும் உறுப்புக் கட்சிகளில் மக்களின் நம்பிக்கைக்குரியக் கட்சி டிஏபி என்று கூறலாம்.

வேண்டுமோ, இல்லையோ, ஜிஇ14-ல் ஆட்சியைக் கைப்பற்ற பாரிசான் – ஹராப்பான் இரண்டுக்குமே இந்தியர்களின் ஆதரவு மிக முக்கியம்.

அதனால்தான் பிஎன் இந்தியர்கள் மீது கவனம் செலுத்தி, ‘மலேசிய இந்தியச் சமூகச் செயல் திட்டம் (எம்.ஐ.பி.) போன்ற பல்வேறு திட்டங்களுடன், அரசாங்கத் துறையில் 7% வேலைவாய்ப்பு போன்ற வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருகிறது.

அதே நேரத்தில், இந்திய வாக்காளர்களைக் கவர பக்காத்தான் ஹராப்பான் இன்னமும் விரும்பினால், பக்காத்தானில் இந்தியர்களின் ஈடுபாட்டைப் புறக்கணிக்காமல், அந்த சிறுபான்மையினரை அணுக வழிதேட வேண்டும்.

இந்த விஷயத்தை ஹராப்பான் அலட்சியம் செய்தால், மாநில அல்லது மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கான இலக்கை அவர்களால் அடைய முடியாது.

-பெரித்தா டெய்லி