ஹாடி : மலேசியாவில் பொருளாதாரப் பிரச்சனைக்குக் காரணம் பக்காத்தான் தலைவர்கள்

இன்று மலேசியா எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குக் காரணம் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் என பாஸ் தலைவர் அப்துல் ஹடி அவாங் கூறியுள்ளார்.

அந்தத் தலைவரின் பெயரைக் குறிப்பிடாமல், இன்றையப் பொருளாதார பிரச்சனைகளுக்கு, 80-களில் இருந்து நாட்டை ஆண்ட தலைவர்கள்தான் காரணம் என்றார் அவர்.

“நாடு எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார பிரச்சினைகள், அது அரசாங்கம் ஆனாலும் சரி அல்லது மக்களாக இருந்தாலும் சரி, அவை இன்று பக்காத்தான் ஹராப்பானில் உட்கார்ந்திருக்கும் தலைவர்களால் உருவானது.

ஹாடி, 1981-ல் இருந்து 2003 வரை நாட்டின் பிரதமராக இருந்த, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதிரைக் குறிப்பிடுகிறார் என்று நம்பப்படுகிறது.

இந்தப் பிரச்சனைகள் தீர, அரசாங்கத்திற்குப் பாஸ் ஆலோசனை வழங்க தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“நாம் அரசாங்கம் அமைத்தால், அதனை செயல்படுத்தலாம்.

“நாம் அரசாங்கத்தை அமைக்கவில்லை என்றால், தற்போதய பக்காத்தான் தலைவர்கள் செய்த தவறுகளைத் திருத்தியமைக்க, அரசாங்கத்திற்கு ஆலோசகராக இருக்கலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.