உங்கள் கருத்து: ரபிடாவுக்கு பிஎன் அளித்த விளக்கம் மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது

நஜிப்பின்  ரிம2.6 பில்லியனுக்கு  வருமான  வரி  விதிக்கப்பட்டதா? ரபிடா   கேட்கிறார்

சூசாகேஸ்:  ஒருவர்  வருமான  வரி   கட்டாதிருக்க   வரிவிலக்குக்கு   விண்ணப்பத்திருக்க   வேண்டும்.  இல்லையென்றால்,  குப்பன்,  சுப்பன்    எல்லாருமே   தங்கள்  வருமானம்  நன்கொடையாக    வந்தது  என்று  கூறத்  தொடங்கி  விடுவார்கள்.

நானும்கூட  ஒரு  நிறுவனத்தைத்   தொடங்கி   அதில்  ‘அண்ணன்’,  ‘தம்பி’,  ‘அப்பா’,    ‘அம்மா’  எல்லோரையும்  இயக்குனர்களாக  நியமிப்பேன்.  அவர்களின்    வருமானத்தை   நன்கொடை    என்று  பதிவு  செய்வேன்.  அதற்கான  இரசீதுகளையும்  கொடுப்பேன்.

முன்னாள்  அமைச்சர்   ரபிடா  அசீஸ்   முக்கியமான  கேள்வி  ஒன்றை  எழுப்பியுள்ளார்-   மலேசிய   முதல்நிலை   அதிகாரி(எம்ஓ1)  நன்கொடை   என்று   கூறிக்கொண்டிருப்பதை  அது   உண்மையில்  நன்கொடைதானா  என்பதை    வருமான  வரி  வாரியம் (ஐஆர்பி)      விசாரித்ததா?  அவர்   அதற்கு   வரிவிலக்கு  பெற்றுள்ளாரா?

அது  எப்படிப்பட்ட   நன்கொடை?  அது   அரசியல்   நன்கொடை   என்றால்   அதற்குச்   சான்று   காட்ட   முடியுமா?

ஐஆர்பி விசாரணைக்கு   உள்ளானவர்களுக்குத்    தெரியும்   அதற்குள்ள   விரிவான   அதிகாரங்கள்   குறித்து.

கிம் குவெக்: பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கிடம்  அவரது  கணக்கில்    காணப்பட்ட   பணம்   எங்கிருந்து   வந்தது   என்பதைக்  கேட்கும்  உரிமை  ஐஆர்பிக்கு  உண்டு.

இது  முக்கியமான  பொது  விவகாரமாகி  விட்டதால்   ஐஆர்பி    தலைமை  இயக்குனர்   அப்படிக்  கேட்கப்பட்டதா  என்பதை  விளக்கி   உடனடியாக   அறிக்கை   வெளியிட  வேண்டும்.  அப்படி  எதுவும்  கேட்கவில்லை   என்றால்   ஏன்  இல்லை  என்பதற்கும்  காரணம்   கூற   வேண்டும்.

பெயரிலி 494481459995345:  யுஎஸ்10,000  மேல்  பணம்  வெளிநாட்டுக்கு   அனுப்புவதாக  இருந்தால்    பேங்க்  நெகாரா  விதிப்படி   அது  தொடர்பான   விவரங்களை   அதற்கெனவுள்ள    பாரங்களில்  நிரப்ப   வேண்டும்.

அப்படிப்  பார்த்தால்,   பணம்   எப்போது,  எங்கு  அனுப்பப்பட்டது   என்ற   தகவலை   பேங்க்   நெகாராவால்  கொடுக்க   முடியும்.

அல்டிமேட்:   நமது  வருமான   வரி   வாரியத்துக்குக்  கெட்டிக்காரத்தனம்   போதாது.  நன்கொடைக்கு  வரிவிலக்கு   உண்டு    என்றாலும்  அதற்குக்  கிடைக்கும்  வட்டி   வருமானம்தான்.  வருமானம்   என்பதால்  அதன்மீது  வரி  விதிக்கலாம்.

1% வட்டி  என்றால்   ரிம2.6 பில்லியனுக்கு  ஆண்டுக்கு  ரிம26 மில்லியன்  அல்லது  மாதம்  ரிம2.1 மில்லியன்   வட்டி.

ஹோப்லெஸ்: நல்லாத்தான்    கேட்டார்   ரபிடா .  மலேசிய   சட்ட   அமலாக்கத்   துறைகள்  எவ்வளவு  ஊழல்  மிக்கவை   என்பதற்கு  இந்த  ரிம2.6பில்லியன்  விவகாரம்   நல்ல   சான்று.

ஐஆர்பியும்  அதில்  ஒன்று.   பார்த்துக்கொண்டே     இருங்கள்,   நஜிப்  வரி  செலுத்த  வேண்டியதில்லை   என்பதற்கு  ஏதாவது   மடத்தனமான   காரணம்  ஒன்றைக்  கூறுவார்கள்.

மைமலேசியா:  நன்கொடைகளுக்கு  வரிவிலக்கு   என்றால்    என்  சம்பளத்தையும்  நன்கொடை   என்று   அறிவிக்க   வேண்டுகிறேன். முடியுமா,  முடியாதா, ஐஆர்பி?

கோல்டீ:  நன்கொடையையும்  திருப்பிக்  கொடுக்க    வேண்டுமா?  கடன்களைத்தானே   திருப்பிக்  கொடுக்க   வேண்டும்.

அப்பணத்தை  ஜிஇ 13க்குப்  பயன்படுத்திக்  கொண்டதாக  பராமரிப்புப்  பிரதமர்    கூறினார்.     பிஎன்  தேர்தலில்  வென்று   ஆட்சியைத்   தக்க   வைத்துக்கொள்ள   வேண்டும்   என்பதுதான்  சவூதி   அரசின்  விருப்பமாம். அப்பணத்தைத்  தமக்காகப்  பயன்படுத்திக்கொள்ளவில்லை   என்றும்  அதில்   பகுதி  திருப்பிக்  கொடுக்கப்பட்டது  என்றும்   அவர்   சொன்னார்.

இப்போது  பிஎன்  வியூக  தொடர்புக்குழு (பிஎன்எஸ்சி)  கூறுகிறது   பணம்   மொத்தமும்   அல்லாவிட்டாலும்   அதில்  பெரும்பகுதி  கொடையாளியிடமே   திருப்பிக்  கொடுக்கப்பட்டு  விட்டதாக.

இது  சரியில்லையே,  பராமரிப்புப்  பிரதமர்    ஒன்று  கூறுகிறார்.  பிஎன்எஸ்சி  வேறொன்று  கூறுகிறது.

எர்கோ  சம்:    பிரச்னை    என்னன்னா……நஜிப்  வங்கிக்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்ட   பணம்  அரபு  கொடையாளி  கொடுத்தது   என்று  கூறப்படுகிறது.    அதே  வேளை   அமெரிக்க   நீதித்  துறை(டிஓஜே)யோ  அது  1எம்டிபி  பணம்   என்கிறது.

பணம்   திருப்பிக்  கொடுக்கப்பட்டதா  இல்லையா   என்பது   பிரச்னை  இல்லை.    பிஎன்எஸ்சி   அது  நன்கொடைதான்   என்பதற்கான    ஆதாரத்தைக்  காண்பித்து     டிஓஜே  சொல்வது  பொய்  என்பதை  நிரூபிக்கலாமே.