அன்வாருக்கு சிறப்பான அதிகாரங்கள் இல்லை, மகாதிர் கூறுகிறார்

இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பிரதமர் பதவியைத் துறந்த பின்னரும் பின்னணியிலிருந்து தொடர்ந்து தமது பங்களிப்பைச் செய்யப் போவதாக பிரதமர் மகாதிர் கூறினார்.

தமது இடத்திற்கு பிரதமராக அன்வார் வருவது பற்றி குறிப்பிட்ட மகாதிர், அவர் நாடாளுமன்றத்தில் ஒரு இருக்கையைப் பெற வேண்டும்; அதன் பின்னர் அவருக்கு அமைச்சரவையில் பதவி அளிக்கப்படும் என்றாரவர்.

எனினும், இந்தக் கூட்டணியில் அன்வாரின் பங்கு அதில் இருக்கும் மற்ற மூன்று கட்சிகளின் தலைவர்களுக்கு இருக்கும் அதே பங்கைப் பெற்றிருப்பார்.

“அவர் மற்ற மூன்று தலைவர்களுக்கு இருக்கும் அதே பங்கை ஆற்றுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

“அமைச்சர்கள் அல்லது துணை அமைச்சர்கள் அல்லது துணைப் பிரதமர் ஆகியோருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைப் போன்றதைத் தவிர சிறப்பான அதிகாரங்கள் எதுவும் இருக்காது”, என்று மகாதிர் மேலும் கூறினார்.

ஐந்து ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் அன்வார் இப்ராகிம் பேரரசரின் மன்னிப்பைப் பெற்று நாளை விடுவிக்கப்படும் திட்டம் இருக்கிறது.