ஜூன் தொடக்கத்திலிருந்து சுழியம் விழுக்காடு ஜிஎஸ்டி, நிதி அமைச்சு அறிவிப்பு

 

ஜூன் மாதம் 1 ஆம் தேதியிலிருந்து ஜிஎஸ்டி வரி விதிப்பு 6 விழுக்காட்டிலிருந்து சுழியம் (0) விழுக்காட்டிற்கு குறைக்கப்படும் என்று நிதி அமைச்சு இன்று அறிவித்தது.

ஜிஎஸ்டி வரி வசூலிப்பதை நிறுத்தும்படி தாம் நிதி அமைச்சுக்கு உத்தரவிட்டிருப்பதாக பிரதமர் மகாதிர் செய்த அறிவிப்புக்குப் பின்னர் நிதி அமைச்சு இந்த அறிவிப்பைச் செய்துள்ளது.

ஜிஎஸ்டி அகற்றப்படுவது பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள 100 நாள்களில் அகற்ற வாக்குறுதி அளித்தவைகளில் ஒன்றாகும்.

இன்று பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் அமர்ந்த ஏழாவது நாளாகும்.

இந்த நடவடிக்கை ஜூன் 1 லிருந்து நாடு முழுமைக்கும் அமலாக்கம் காண்கிறது.

அனைத்து வணிகங்களும் இந்த உத்தரவுப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அந்த நிதி அமைச்சின் அறிக்கை மேலும் கூறுகிறது.