இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலேசிய வருகையை எதிர்த்து புத்ரா செயாவில் மலேசிய நாம் தமிழர் இயக்கம் கண்டன போராட்டம்

தமிழர்களின் எதிரியும் (RSS) எனும் தீவிரவாத அமைப்பின் கைப்பாவையுமான இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகையை எதிர்த்து நாட்டிளுள்ள பொது அமைப்புகள் சில ஒன்றிணைந்து கண்டன பேரணியாக பிரதமர் துறை அலுவலகத்தில் மனு வழக்கியதாக இயக்க தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடிப்பு செய்வதும் மட்டுமின்றி பல மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்ட செதெர்லைட், நீயூட்ரோனோ, மீத்தேன், கூடங்குளம் அணுவுலை,  கேல் எரிவாயு போன்ற அபாயகர திட்டங்களை திட்டமிட்டு தமிழகத்தில் அமுல்படுத்தியும் நீட்தேர்வு, பாலாறு சிக்கல், முல்லை பெரியார் அணை, மீனவர்கள் படுகொலை, படகு பறிப்பு, விலைவாசி உயர்வு, இந்தி திணிப்பு போன்ற எண்ணிலடங்கா வாழ்வுரிமை போராட்டங்களை உருவாகி தமிழக மக்களை வஞ்சிக்கிறது இந்த மோடியின் மத்திய  (BJP) அரசு என்றார்.

போராட்டத்திற்கு தலையேற்ற இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. முஅ. கலைமுகிலன் அவர்கள், தூத்துக்குடியில் செதெர்லைட் ஆலையை எதிர்த்து 100 நாட்கள் அறவழி போராட்டத்தை கலைக்கவும் இனி மத்திய அரசு கொண்டு வரும் எத்திட்டத்திற்கும் போராட கூடாதேன அச்சுறுத்துவதற்காகவே  மாநில அரசு துணையுடன் திட்டமிட்டு தமிழர்களை இனப்படுகொலை செய்திருக்கிறார்கள் என்றும், உயிரிழந்தவர்களை இன்றுவரை கடமைக்காக கூட சென்று காணவில்லை ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்றார்.

மேலும் அமைதியான இந்த நாட்டில் நாம் பல கட்சிகளில் பல கருத்து வேறுபாடுகளோடு இருந்தாலும் நாம் அனைவரும் மலேசியராக நிற்கிறோம். அப்படியிருக்க இது போன்ற மதவாதிகளையும் இனப் படுகொலையாளிகளையும் வரவேற்க கூடாது எனவும் கடந்த காலத்தில் இராசப்பக்சே மற்றும் சிறி சேனா போன்ற கொடுங்கோலன்களை வரவேற்று முந்தைய அரசு தவறிழைத்தது. அதனால் சில அசம்பாவித சம்பவங்களால் நாட்டின் நற்பெயரும் கெட்டன என நினைவு கூர்ந்தார்.

இக்கண்டன கூட்ட ஏற்பாட்டாளர்களின் ஒருவரும் பல்வேறு தமிழ் முசுலிம் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளருமான திரு. அசி.பாசீர் அவர்கள் மோடியால் இந்துத்துவ வெறி மாற்றம் சதி நடைபெறுவதாகவும் இசுலாமியர்கள் உரிமைகள் மறுக்கப்புவதாகவும் மாட்டு கறி உண்ண தடை விதிக்கப்படுவதாகவும் இந்திய இசுலாமியர்களுக்கு எதிராக தொடர் அடக்குமுறை நிகழ்வதாகவும் குற்றம் சாட்டினார்.

இயக்க தமிழக உறவு பாசறை பொறுப்பாளர் திரு. வேங்கை இப்ராகிம் அவர்கள் மோடி குசராத் முதல்வராக இருந்த போது பல ஆயிரம் முசுலிம்கள் கொல்லப்பட்டதனுடன் காசுமீரில் இன்றும் இசுலாமியர்கள் படுகொலை, பெண்கள் பலாத்காரங்கள்  தொடர்ந்தும் கொண்டிருப்பதாகவும் சமீபத்தில் 8 வயது ஆசிபா எனும் சிறுமியை 8 நாட்கள் அடைத்து அடித்து 8 பேருக்கும் மேல் வன்கொடுமைப் படுத்திக் கொலை செய்யப்பட்டதும் இந்த மோடியின் மதவாத (BJP) மற்றும் (RSS)  தீவிரவாத உறுப்பினர்கள் தான் என்றார்.

இயக்க தேசிய இளைஞர் பாசறை பொறுப்பாளர் திரு மாவேந்தன் அவர்கள், சர்வதேச குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்பட வேண்டிய கொடுரனான  நாசகார நரேந்திர மோடியை மலேசிய திருநாட்டுக்குள் அனுமதித்தது மலேசிய தமிழர்களின் மனதை புண்படுத்திய செயலாகும் என்றதோடு  இனி வரும் காலங்களில் புதிய மலேசிய அரசு தமிழர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இவ்வேதிர்ப்பு கூடலில் நாட்டிளுள்ள தமிழர் தேய இயக்கங்கள் மற்றும் இசுலாமிய அமைப்புகள் என 44 அமைப்புகளை பிரதிநிதித்து சுமார் 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.