இலங்கையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் இந்து மத விவகார அலுவல்கள் பிரதியமைச்சராக நியமனம்!

ஸ்ரீலங்காவின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பட்டியலில் தமிழர் ஒருவர் உட்பட ஏழு பேர் புதிதாக இணைந்துகொண்டுள்ளனர்.

அங்கஜன் இராமநாதன் மற்றும் காதர் மஸ்தான் உட்பட பிரதி அமைச்சர்கள் ஐந்து பேரும் இராஜாங்க அமைச்சர்கள் இருவரும் என ஏழுபேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சர்ச்சை அடுத்து தேசிய அரசாங்கத்தில் இருந்து 16 பேர் விலகியிருந்தனர்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் ஏழு பேர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பிரதி அமைச்சர்கள் ஐந்து பேரும் இராஜாங்க அமைச்சர் இருவருமாக ஏழு பேர் ஜனாதிபதிய செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதற்கமைய, அஜித் மான்னப்பெரும சுற்றுச்சூழல் பிரதியமைச்சராகவும் விவசயாத்துறை பிரதியமைச்சராக அங்கஜன் ராமநாதனும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அலுவல்கள் பிரதியமைச்சராக காதர் மஸ்தானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி பிரதியமைச்சராக எட்வட் குணசேகரவும், அரச நிர்வாகம், முகாமைத்துவ மற்றும் சட்ட ஒழுங்குபிரதியமைச்சராக நளின் பண்டாரவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக ரஞ்சித் அலுவிகாரவும், மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்டஉட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லக்கீ ஜயவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: