தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஜூலை 1 இல் வேலையைக் காலி செய்கிறார்

 

தேர்தல் ஆணையத்தின் (இசி) தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா ஜூலை 1 இல் ஆணையத்திலிருந்து வெளியேறுகிறார்.

இசி தலைவர் அவரது வேலைக் காலத்தைக் குறைத்துக் கொள்கிறார். அது ஜூலை 1 லிருந்து அமலுக்கு வருகிறது என்று தேர்தல் ஆணையத்தின் அறிக்கை இன்று தெரிவித்தது.

பேரரசர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், பிரதமர் மகாதிருக்கும் இந்த விவகாரம் ஜூன் 11 தேதியிட்ட கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

14 ஆவது பொதுத் தேர்தலை நடத்துவதில் இசி தலைவர் முகமட் ஹசிம் பிஎன் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக ஏராளமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், அவர் இக்குற்றச்சாட்டிகளை மறுத்தார்.