வட்டாரம்: சர்ச்சைக்குரிய பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மகாதிர் கலந்துகொள்ள மாட்டார்

 

மகாதிருக்காக சீன அமைப்புகள் திட்டமிட்டிருக்கும் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மகாதிர் கலந்துகொள்ள மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிறந்த நாள் நிகழ்ச்சி சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது, ஏனென்றால் அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான வாணிகர் டீ யாம் கூ டீ காம் பழைய அவசரக்கால சட்டம் 1969 இன் கீழ் 2005 ஆம் ஆண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

தாம் இரகசியக் கும்பலுடன் தொடர்புடையவர் என்ற அரசாங்கத்தின் கூற்றை கூ மறுத்துள்ளார்.

ஜூலை 22 இல் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அந்த பிறந்த நாள் கொண்டாட்டம் பிரதமரின் நிகழ்ச்சி அட்டவனையில் இடம் பெற்றிருக்கவில்லை என்று பிரதமர் அலுவலக வட்டாரம் மலேசியாகினியிடம் கூறியுள்ளது.

இந்நிகழ்ச்சியை கோலாலம்பூர், ஜாலான் புடுவிலுள்ள ஒரு உணவகத்தில் ஜூலை 22 இல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இதன் ஏற்பாட்டாளர்கள் 2,000 சீன அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துள்ளனர். மேலும், நம்பிக்கை மலேசியா நிதியத்திற்கு ரிம100,000 வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.