ரிச்சர்ட் மலான்ஜும் புதிய தலைமை நீதிபதியாக பதவி உறுதிமொழி எடுத்துகொண்டார்

 

சாபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலான்ஜும் இன்றிரவு புதிய தலைமை நீதிபதியாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

நாட்டின் மிக உயர்ந்த நீதிபதி பதவிக்கு போர்னியோ மாநிலங்களிலிருந்து நியமிக்கப்பட்ட முதல் நபர் இவர் ஆவார்.

மலாயாவின் தலைமை நீதிபதி அஹமட் ம’ரோப் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிக்கு உயர்த்தப்படுவார்.

நீதிபதி ஸஹாரா இப்ராகிம் நீதிபதி அஹமட்டின் இடத்தில் மலாயாவின் தலைமை நீதிபதியாகவும், நீதிபதி டேவிட் வோங் டாக் வா சாபா மற்றும் சரவாக் மாநிலங்களின் புதிய தலைமை நீதிபதியாவார்.

பேரரசர் சுல்தான் முகமட் V-இன் முன் அவர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வர்.

தலைமை நீதிபதி முகமட் ரவுஸ் ஷாரிப் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஸுல்கெப்ளி அஹமட் மக்கினுடின், இவர்கள் இருவரும் ஜூலை 31 இல் பதவி ஓய்வு பெறவிருந்தனர், இன்றிலிருந்து பதவி ஓய்வு பெறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக வட்டாரத் தகவல் கூறுகிறது.

இன்று நடந்த மலாய் ஆட்சியாளர்களின் மாநாட்டிற்குப் பின்னர் இது நடந்துள்ளது.