15 ஆண்டுகளுக்குப் பின்னர் மகாதிர் மீண்டும் நாடாளுமன்றம் திரும்பினார்

93 வயது  டாக்டர்   மகாதிர்   முகம்மட்   மலேசியாவின்  மிக  வயதான  நாடாளுமன்ற   உறுப்பினராக    இன்று   பதவி   உறுதிமொழி    எடுத்துக்கொண்டு     சாதனை    புரிந்துள்ளார்.

2003  நவம்பருக்குப்  பிறகு   அவர்    மக்களவையில்    அடியெடுத்து   வைப்பது   இதுவே   முதல்  முறையாகும்.  அப்போது,  பிரதமர்  பதவியை    அப்துல்லா   அஹமட்   படாவியிடம்   ஒப்படைத்துவிட்டு    அவர்    விலகிக்கொண்டபோது   அவர்  குபாங்   பாசு  எம்பியாக   இருந்தார்.

இப்போது  மகாதிர்  மீண்டும்   பிரதமர்    அத்துடன்   பக்கத்தான்   ஹரப்பான்   தலைவருமாவார்.

மக்களவையில்    அவருக்குப்  பக்கத்தில்  துணைப்  பிரதமர்   டாக்டர்    வான்  அசிசா  வான்  இஸ்மாயில்(ஹரப்பான் -பாண்டான்).  அவரை   அடுத்து  தற்காப்பு   அமைச்சர்   முகம்மட்  சாபு (ஹரப்பான் -கோட்டா ராஜா).  மகாதிருக்குப்  பின்புறம்  போக்குவரத்து   அமைச்சர்  அந்தோனி  லோக்(ஹரப்பான் -சிரம்பான்).

மகாதிருக்கு   எதிரில்  எதிரணித்   தலைவர்   இருக்கையில்     முன்னாள்   துணைப்   பிரதமர்  அஹமட்  ஜாஹிட்   ஹமிடி (பிஎன் -பாகான்   டத்தோ).  அவருக்கு  இடப்புறத்தில்   முன்னாள்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக் (பிஎன்-  பெக்கான்).