போலிச் செய்தித் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல்

பிரதமர்துறை   அமைச்சர்   லியு  வுய்   கியோங்,   போலிச்  செய்தித்  தடுப்புச்  சட்டத்தை  இரத்துச்  செய்யும்  சட்டவரைவை   இன்று   நாடாளுமன்றத்தில்   தாக்கல்    செய்தார்.

பக்கத்தான்   ஹரப்பான்     அதன்    தேர்தல்    அறிக்கையில்      இரத்துச்  செய்யப்படும்   என்று     உறுதி  கூறிய  சட்டங்களில்  இதுவும்   ஒன்று.

போலிச்  செய்தித்   தடுப்புச்  சட்டம்   ஏப்ரல்  11  அமலுக்கு   வந்த   ஒரு   சட்டமாகும்.   அச்சட்டத்தில்   ‘போலிச்  செய்தி’   என்றால்   என்ன   என்பதற்குத்   தெளிவான   விளக்கம்    இல்லை   என்றும்   அது   கடுமையான   தண்டனைகள்   கொடுக்கப்படுவதற்கு    இடமளிக்கிறது  என்றும்  ஊடகங்களுக்கு  மருட்டலானது   என்றும்   கடும்   எதிர்ப்புக்  கிளம்பியது.