ஜிஎஸ்டி, எஸ்எஸ்டி வேண்டாம், ஸாகாட் வரி போதும் என்கிறார் பாஸ் எம்பி

 

விற்பனை வரி மசோதா 2018 மற்றும் சேவை வரி மசோதா 2018 ஆகிய இரண்டையும் நாடாளுமன்றம் ஏற்றுக்கொன்டுள்ளது. ஆனால், பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அக்கட்சி முன்வைத்துள்ள மாற்று முறை வரி விதிப்பு அனைவருக்கும் நியாயமாக இருக்கும் என்கிறார்.

ஜிஎஸ்டியை அகற்றி விட்டு எஸ்எஸ்டி வரி விதிப்பது இறுதியில் யாருக்கும் பயனளிக்கப் போவதில்லை. மக்கள் விலை உயர்வை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றாரவர்.

அரசாங்கம் பாஸ் முன்வைத்துள்ள வரி முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது இஸ்லாமிய பத்தில் ஒரு பங்கு வரி செலுத்தும் (டிதி/tithe) முறையை அடிப்படையாகக் கொண்டது. கட்சி இதனை 14 ஆவது பொதுத் தேர்தலின் போது முன்வைத்தது என்று கோல நெருஸ் நாடாளுமன்ற உறுப்பினரான கைருடின் அமன் ரஸாலி கூறினார்.

ஜிஎஸ்டியோ எஸ்எஸ்டியோ, அவற்றின் விளவுகள் ஒன்றுதான். பயணீட்டாளர்கள் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலை ஏற்றத்தைச் சுமக்க வேண்டியிருக்கும் என்றார்.

இதற்கு ஸாகாட் எடுத்துக்காட்டமைப்பு மிகச் சிறந்ததாகும். இது இஸ்லாமியர்களுக்கு ஒரு சமயப்பற்றான செயல் மட்டுமல்ல, இது செல்வத்தை மக்களிடையே நியாயமாகப் பகிர்ந்து அளிக்கும் வழியாகும் என்று அவரது அறிக்கை கூறுகிறது.