குடும்பத் தலைவிகள், தனித்து வாழும் தாய்மார்களுக்கான இபிஎப்- இன்று முதல் பதிவு செய்துகொள்ளலாம்

ஊழியர் சேமிப்பு நிதி வாரியம், தகுதியுடையவர்கள் இன்று முதல் Caruman Sukarela Insentif Suri (ஐ-சூரி) திட்டத்தில் தங்களைப் பதிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

வறுமைமீதான தேசிய தரவுத்தளத்தில் (eKasih) இடம்பெற்றுள்ள குடும்பத் தலைவிகள், விதவைகள், தனித்து வாழும் தாய்மார் ஆகியோர் ஐ-சூரி திட்டத்தில் பதிந்துகொண்டு மாதம் குறைந்தது ஐந்து ரிங்கிட்டை அவர்களின் பணி ஓய்வுக் கணக்குக்குச் சந்தாவாக செலுத்த வேண்டும். அரசாங்கம் அதன் பங்குக்கு மாதம் ரிம40 -ஐ அவர்களின் கணக்கில் போடும்.

இபிஎப் சந்தாதார்கள் அனுபவிக்கும் அத்தனை நன்மைகளும்- வருடாந்திர ஈவு, 50வது 55வது, 60வது வயதில் சேமிப்பை மீட்டுக்கொள்ளுதல், வேலை செய்ய இயலாமல் போனால் கிடைக்கும் நிதியுதவி, மரண அனுகூலங்கள் போன்றவை- ஐ-சூரி திட்டப் பங்கேற்பாளர்களுக்கும் கிடைக்கும்.