போலியான செய்தித் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட்டது

 

நாடாளுமன்ற மக்களவை சர்ச்சைக்குள்ளான போலியான செய்தித் தடை சட்டத்தை இரத்து செய்யும் மசோதாவை குரல் ஒலி வாக்களிப்பின் வழி ஏற்றுக்கொண்டது.

பிரதமர் இலாகா துணை அமைச்சர் முகமட் ஹனிபா, முந்தைய அரசாங்கம் இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கு மாறாக நடப்பிலிருந்த சட்டத்தை மேம்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறினார்.

மக்களின் நன்மைக்காக அல்லாமல் அதன் கூட்டணியின் நன்மைக்காக சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்தை பின் பயன்படுத்தியது என்று அவர் பிஎன் மீது குற்றம் சுமதினார்.

“அதன் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பிஎன் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தியது. உங்கள் காலம் முடிந்து விட்டது”, என்று அவர் மேலும் கூறினார்.

போலியான செய்தித் தடைச் சட்டத்திற்கு எதிராக மலேசியாகினியும் சட்ட நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதன் சட்ட நடவடிக்கை சட்ட நுணுக்க அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டது.