ஜோ லாவின் அசாதாரணமான செல்வாக்கை சிஇபி வெல்ல முடியாது, ஹரப்பான் செனட்டர் கூறுகிறார்

 

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் அரசாங்கத்தின் மீது வணிகர் ஜோ லா கொண்டிருக்கும் அசாதாரணமான செல்வாக்கை மேன்மக்கள் மன்றம் (சிஇபி) விஞ்ச முடியாது என்று பக்கத்தான் ஹரப்பான் செனட்டர் ராஜா கமருல் பாரின் ஷா ராஜா அஹமட் கூறுகிறார்.

சிஇபியை நஜிப் குறை கூறியிருந்தார். அதற்குப் பதில் அளித்த ராஜா கமருல் இவ்வாறு கூறினார். மேன்மக்கள் உறுப்பினர்கள் அனுபவமிக்க மேன்மக்கள். ஆனால் அவர்கள் அதிகாரம் ஏதுமற்ற ஆலோசகர்கள் என்றாரவர்.

இதற்கு எதிர்மாறாக இருக்கிறார் ஜோ லா. சாதனை ஏதும் புரியாத ஜோ 1எம்டிபி ஊழல் விவகாரத்தைத் தொடர்ந்து புகழ் பெற்றவராகி விட்டார். அந்த ஊழலில் பல பில்லியன்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நஜிப்பின் வளர்ப்பு மகன் ரிஸா அசிஸ் மற்றும் மனைவி ரோஸ்மா மான்சோர் ஆகியோர் மீது ஜோ லா கொண்டிருக்கும் நெருங்கிய உறவை மக்களுக்கு ராஜா கமருல் நினைவுறுத்தினார்.

ஜோ லாவின் செல்வாக்கும் அதிகாரமும் அசாதாரணமானது. அது மேன்மக்கள் மன்ற உறுப்பினர்களின் செல்வாக்கைவிட வலுவானது என்று செனட்டர் ராஜா கமருல் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.