எஸ்எஸ்டிக்குப் பிறகு ஐந்து வகையான கார்களின் விலைகள் குறைந்தன

 

விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி) அமலாக்கத்திற்குப் பின்னர் பல வகையான கார்களின், இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் உட்பட, விலைகள் ரிம3,000 வரையில் இறக்கம் கண்டுள்ளன.

இந்தத் தகவலை அளித்த நிதி அமைச்சர் லிம் குவான் எங், விலை இறக்கம் கண்ட கார்கள் பெரொடுவா, ஹோண்டா, தோயோடா, பிஎம்டபுள்யு மற்றும் போல்க்ஸ்வாகன் என்று தெரிவித்தார்.

பல வகையான கார்களின் விலைகள் ஜிஎஸ்டி வரி அமலிலிருந்த காலத்தின் விலையைவிட இப்போது குறைவாக இருப்பதாகத் தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று அமைச்சர் லிம் கூறினார்.

இது ஏன் என்றால் நாம் ஜிஎஸ்டியை விட குறைவான விதிக்கிறோம். மக்களின் வாழ்வு வளம் பெற வேண்டும் என்பதற்காக அரசாங்கம் இதை ஏற்றுக்கொண்டது என்று அவர் பினாங்கில் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.