ஏன் போர்ட் டிக்சனுக்கு போகிறேன், அன்வார் விளக்கமளிக்கிறார்

போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் பாலகோபால் அப்துல்லா தாம் அத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதில் காட்டிய மனப்பூர்வமான ஆதரவுதான் தாம் போர்ட் டிக்சனில் போட்டியிட முடிவெடுத்தற்கான காரணம் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று ஹாங்காங்கில் கூறினார்.

எனக்கு விட்டுக்கொடுப்பதில் டேமியல் மிகுந்த தீவிரம் காட்டினார். எனக்கு விட்டுக்கொடுக்கப் பலர் இருந்தார்கள். ஆனால், அரசியலில் சிலர் ஆம் என்று அறிவிப்பார்கள், பிறகு பின்வாங்கி விடுவார்கள் என்றார் அன்வார்,

ஆனால், டேனியில் மிகத் தீவிரமாக இருந்தார். அவர் விலகிக்கொள்ளவில்லை என்றும் அவர் தொடர்ந்து தெலுக் கெமாங் (பழைய பெயர்) தொகுதியில் தமக்கு உதவியாளராக இருப்பார் என்று கூறியதாகவும் அன்வார் தெரிவித்தார்.

அவர் சிறப்பாக விவாதம் செய்தார். நான் கவரப்பட்டேன் என்று கூறிய அன்வார், தமக்கு டேனியலை அவர் பேராக்கில் பிகேஆர் உறுப்பினராக இருந்த காலத்திலிருந்து தெரியும் என்றும் கூறினார்.

நான் தேர்வு செய்வதற்கு வடக்கில், மத்தியப் பகுதியில் மற்றும் தெற்கில் இருக்கைகள் கொடுக்கப்பட்டன. ஆனால், டேனியல் என்னை மிகவும் கவந்து விட்டார் என்று அன்வார் மேலும் கூறினார்.

பிகேஆர் இன்று முன்னேரத்தில் வெளியிட்ட அறிக்கையில் டேனியல் அவரது நாடாளுமன்ற இருக்கையைக் காலி செய்வார் என்றும் அன்வார் அங்கு போட்டியிடுவார் என்றும் அறிவித்துள்ளது.