போர்ட் டிக்சன் இருக்கை: பாஸ், மஇகா கட்சி கூட்டங்களை நடத்தப் போகின்றன

எதிர்வரும் போர்ட் டிக்சன் இடைத் தேர்தலில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவது பற்றி பாஸ் மற்றும் மஇகா கட்சி கூட்டங்களை நடத்தவிருக்கின்றன,

பாஸ் இன்னும் அது பற்றி விவாதிக்கவில்லை. நாங்கள் சந்தித்து முடிவு செய்வோம் என்று பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் இன்று கூறினார்,

பாஸ் கூட்டத்தில் அம்னோ இடம் பெறாது என்று தொடர்பு கொண்ட போது அவர் மலேசியாகினியிட்ம் கூறினார்,

அந்த இருக்கை அன்வாருக்கு பாதுகாப்பானது என்று தாம் நம்புவதாக துவான் இப்ராகிம் மேலும் கூறினார்.

கொள்கையளவில் மஇகா போட்டியிட வேண்டும்

இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க மஇகா மத்தியச் செயற்குழு நாளை சந்திக்கவிருப்பதாக அக்குழுவின் உறுப்பினர் எம். சரவணன் மலேசியாகினியிடம் கூறினார்,

அக்கூட்டத்தில் மஇகா தலைவர் எஸ், எ. விக்னேஸ்வரன், துணைத் தலைவர் எஸ் கே தேவமணி உதவித் தலைவர்கள் டி. மோகன் மற்றும் ஜெஸ்பால் சிங் ஆகியோரும் இருப்பார்கள் என்று அவர் மேலும் கூறினார்,

போர்ட் டிக்சன் தொகுதி பாரம்பரியமாக ஒரு மஇகா தொகுதியாக இருந்து வந்துள்ளது, ஆகவே கொள்கை அளவில் அங்கு மஇகா போட்டியிட வேண்டும் என்று டி. மோகன் பின்னர் மலேசியாகினியிடம் கூறினார்.

எனினும், இறுதி முடிவு விக்னேஸ்வரன் பிஎன் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடியைச் சந்தித்த பின்னர்தான் எடுக்கப்படும் என்றாரவர்.

ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் அத்தொகுதியில் லிங்கி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் முகம்ட் ரெட்ஸா பின் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்றார்.

போர்ட் டிக்சன் தொகுதி வாக்காளர்களில் பெரும்பான்மையோர் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள். சீனர்கள் 33 விழுக்காடு, இந்தியர்கள் 22 விழுக்காடு மற்றும் மலாய்க்காரர்கள் 43 விழுக்காடு.