‘60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் ஹரப்பான் அம்னோவைவிட மோசமான அரசாங்கமாக இருக்கும் ’

ஹரப்பான் 60 ஆண்டுகள் மலேசியாவை ஆள்வதற்கு அனுமதிக்கப்பட்டால் அது அம்னோ அரசாங்கத்தைவிட மோசமான அரசாங்கமாக விளங்கும் என்கிறார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்.

நிதி அமைச்சர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கு அண்மையில் கைவிடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய ஹாடி, ஹரப்பான் நிர்வாகம் அமைந்த நான்கே மாதங்களில் அது நிகழ்ந்துள்ளது என்றார்.

“இதற்குமுன் அம்னோ 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது மந்திரி புசார்கள், கூட்டரசு அமைச்சர்கள்மீதெல்லாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் தலைவர்கள் சிலர் (ஊழல் செய்ததற்காக) சிறைக்கும் சென்றுள்ளார்.

“பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆகின்றன. (லிம் மீதான) வழக்கு கைவிடப்பட்டது.

“நான்கே மாதங்கள்தான் ஆகின்றன…….அதற்குள் பிரச்னைகளை எதிர்நோக்குகிறார்கள். 60 ஆண்டுகள் கொடுக்கப்பட்டால் என்னவாகும். மோசமாக இருக்கும். அம்னோவைவிட கொடூரமாக இருக்கும்”, என கோலா திரெங்கானுவில் பாஸ் ஆதரவாளர் மாநாட்டில் ஹாடி கூறினார்.