தேர்தல் விதிமுறைகள் செம்மைப்படுத்தப்படும்- இசி

தேர்தல் விதிமுறைகளில் காணப்படும் பலவீனங்களைச் சரிசெய்யப் போவதாக தேர்தல் ஆணையம் (இசி) கூறியது.

சில விதிமுறைகள் தெளிவற்றிருப்பதால் அவற்றை வெவ்வேறு விதமாக விளக்கப்படுத்திக் கொண்டு சர்ச்சையிடலாம் என இசி தலைவர் அஸ்ஹார் அசிசான் கூறினார்.

எனவே தேர்தல் சட்டத்தைச் சீரமைக்க ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்போவதாக அவர் சொன்னார்.

“இன்றுள்ள நிலையில் இசிக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை. அதனால் விதிமுறைகள் தெளிவாக இருப்பதற்காக சட்டத்தைச் சீரமைக்க வேண்டும்.

“அப்போதுதான் வேட்பாளர்களுக்கும் எதைச் செய்யலாம் எதைச் செய்யக் கூடாது என்பது தெளிவாக தெரியும். இப்போது (விதிமுறைகள்) தெளிவாக இல்லாததால் விருப்பம்போல் விளக்கப்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலைதான் உள்ளது”, என்றவர் நேற்றிரவு போர்ட் டிக்சனில் கூறினார்.