பாஜக திட்டம் பலிக்குமா.. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் சாத்தியமா?

டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயன்றால் அது தோல்வியில்தான் முடியும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் சமீப காலமாக வலுத்து வருகின்றன. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இதில் பாஜகவிற்கும் அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றாத மோடி அரசு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தை வைத்து பெரும்பான்மை இந்துக்கள் வாக்குகளை பெற முயலக்கூடும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.

சிக்னல்கள்

இதற்கான சமிக்ஞைகள் வெளியே வர தொடங்கியுள்ளன. ஆம்.. அவசர சட்டம் கொண்டுவந்து, ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பாஜகவிலுள்ள சில தலைவர்கள் மற்றும் சாமியார் அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.

உச்ச நீதிமன்றம்

ஆனால் இதற்கான வாய்ப்பு உள்ளதா, அவ்வாறு ஒரு உத்தரவை பிறப்பித்து நாட்டின் ஸ்திரமற்ற சூழலை உருவாக்க முடியுமா என்றால், அப்படி செய்துவிட முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். ராமர் கோயில் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அவசர சட்டம்

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அதற்குள்ளாக கோர்ட் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வாய்ப்பு இல்லை. இந்த காலகட்டத்தில் அவசர சட்டம் கொண்டுவர முடியுமா என்றால் அதற்கும் சாத்தியம் இல்லை.

தள்ளுபடிக்கு வாய்ப்பு

ஏனெனில் அவசர சட்டம் கொண்டு வந்தால், அதை உச்ச நீதிமன்றம், அனுமதிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். முக்கிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது, அவசர சட்டம் கொண்டு வந்தால் அதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளதாம். ஏனெனில், வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அதுகுறித்து சட்டம் இயற்றுவது சரியான நடைமுறை கிடையாது. அந்த விவகாரம் குதித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பது கூட நடைமுறை கிடையாது. எனவே மத்திய அரசுக்கு இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் செக் வைத்துள்ளது என்பது உறுதி.

tamil.oneindia.com

TAGS: