உலக தமிழினத் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 64வது அகவை நிறைவு நாள் (26 நவம்பர் 1954) வாழ்த்து கவிதை 

அன்னை பார்வதியின் கருவறையில் ஒரு வீர விதை கருவானது…

அந்த வீர விதையின் விடியலைதான் உலகம் பிரபாகரன் என்றது…

பிரபாகரன் அவர்கள் அக்கினி குஞ்சியின் அடையாளம்…

கடல் கலித்து கரையேறும் கார்த்திகேயன்…

வெடித்துச் சிதறும் எரிமலைகளை தன் முதுகில் தூக்கி சுமக்கும் கதிரவன்…

தமிழீழ விடுதலை வேல்விக்கு தீ குச்சிகளை தயாரித்த தமிழீழ துருவன்…

ஆயுதத்தில் அறத்தையும் அறத்தில் ஆயுதத்தையும் ஆட்கொண்டு ஆண்டவன் பிரபாகரன்…

தமிழர் நிலத்தை மீட்கும் ஆற்றல் கொண்ட ஏறு…

எங்கள் தலைவர் பிரபாகரன் பேறு…

காந்தி தேசத்திற்கு அகிம்சையை போதித்து இவனின்றி வேறு யாரு…

பவுத்த தேசத்தில் புத்த நெறியை கடைப்பிடித்தது இவனின்றி வேறு யாரு…

இலங்கையும் இந்தியாவும் அறம்பத்தின் தலைமை…

எம் தலைவர் பிரபாகரன் தமிழர் அறத்தின் பெருமை…

பிரபாகரன் எழுச்சியின் அடையாளம்…

பிரபாகரன் புரட்சியின் பூபாலம்…

பிரபாகரன் தமிழர் இனத்தின் அறன்…

பிரபாகரன் தமிழர் தேசத்தின் திறன்…

பிரபாகரன் தமிழர் அறத்தின் முழக்கம்…

பிரபாகரன் தமிழர் இனத்தின் இயக்கம்…

பிரபாகரன் போராளியின் தாயுமானவன்…

பிரபாகரன் பேரோலியின் கிழக்கானவன்…

பிரபாகரன் விடுதலையின் இலக்கானவன்…

பிரபாகரன் விடியலின் விளக்கானவன்…

எங்கள் தமிழ் வேங்கை பிரபாகரன்…

அவன் புலி பார்வையில்  பொசுங்கியது பவுத்த ஆணவம்…

அவன் வழி தடத்தில் விழுந்தது சிங்கள இராணுவம்…

காலம் கழித்து காத்திருக்கிற வேலன்…

ஈழம் படைக்க காத்திருக்கிற வேளம்…

எங்கள் வீரமகன் பிரபாகரன்…

இடர்ப்பட்ட தமிழினம் ஒடிந்து கிடந்த போது, எதிரிகளை இடிபோல தாக்கிய எள்ளாலன் எங்கள் பிரபாகரன்…

எல்லையில்லா எல்லைக் கொண்டு வாழ்ந்த இனம் கொள்ளை போனபோது, எல்லையில்லா சாமியாய் நின்று மீட்டெடுத்த மீட்பன் எங்கள் பிரபாகரன்…

அண்டை நாடும் அனைத்து நாடும் ஒன்றிணைந்து நின்ற போது, சொந்த நாடு காத்திடவே சொந்த பந்தங்களை இழந்திருந்தான் தமிழீழ புலி அவன் பிரபாகரன் வழி…

இன அழிப்பு நடந்து 10 ஆண்டுகள் கடந்தன,,

எத்திசையும் ஒலிக்கிறது பிரபாகரன் பெயர்,,

ஆணவ தாண்டவத்தில் ஆடலாம்,,

ஆடுங்கள் ஆடுகளே ஆடுங்கள்,,

இந்த அடிமை அடையாளத்தை அறுத்தெறிய இனத்தை கறுவருத்த,,

இருமாப்பை அடித்து நொருக்க வருவான்,,

நீங்கள் அலறியடித்து ஓடும் காலம் விரைவில் வரும்…

பகையே பகையே காத்திரு…

உன் பகை முடிக்க அறத்தின் அறிவன் வருவான்…

அவன் கரத்தில் இறைவன் தெரிவான்…

சோழப் புலிக்கொடி பரந்த மண்ணில் இன்று ஈழப் புலிக்கொடி பிறக்கிறது…

அவன் தரைப்படை கட்டியவன், இவன் மூப்படை கட்டி அவனையே முந்தியவன்…

போர் களத்தின் நெருப்பு…

சமத்துவத்தின் திறப்பு…

புரநாநூற்றின் விழிப்பு…

தலைவன் பிரபாகரனின் பிறப்பு…

எங்கள் சோழப் பரம்பரை கரிகாலனுக்கு இன்று பிறந்த நாள்…

அது தமிழ் தேசத்தின் சிறந்த நாள்…

தமிழ்த் தாய் மடியில் தலைவனுக்கு இன்று தாலாட்டு திருநாள்…

அது எம் இனத்தின் அடையாள பெருநாள்…

சுற்றும் பூமியின் எங்கள் கதிரவனுக்கு தமிழ் திருவிழா…

இது தலைவர் பிறந்த 64வது அகவை பெருவிழா…

காலை கருக்களில் பூத்த செங்காளே, வாகை கிளைகளில் கூவும் செண்பகமே…

கார்த்திகை காற்றில் கை அசைக்கும் படைகளே…

என் தலைவன் தெரிவான்…

திசை வழி அறிவான்…

புதுபடை புரளும்…

தமிழ் ஈழம் மலரும்…

வாழ்த்தி வணங்குகிறோம்…

வாழ்க வாழ்கவே…

ஆக்கம் : கவிபாசுகர்

எழுத்து : பாலமுருகன் வீராசாமி 

மலேசிய நாம் தமிழர் இயக்கம்

TAGS: