சுபாங் சீபில்டு தமிழர் திருக்கோவிலில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு, தக்க நடவடிக்கை வேண்டும் – மலேசிய நாம் தமிழர் இயக்கம் வலியுறுத்தல்

நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் சீபில்டு மாரியம்மன் திருக்கோவிலில் வேற்றின கும்பலால் புகுந்து, தமிழர்களை கடுமையாக தாக்கப்பட்டது கண்டனத்திற்குறியது என்று மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும், பெத்தாலிங் செயா மண்டல ஒருங்கிணைப்பாளருமான திரு. தமிழ்வாணன் முத்தையா தமதறிக்கையில் பதிவு செய்தார் .

கோவிலில் பல பொருட்கள் சேதம் விளைவித்ததுடன் பலருக்கு கடுமையான காயங்கள் நிகழ்ந்திருப்பதை கண்டு, தாம் மிகவும் வருந்துவதாகவும் இதற்கு பொறுப்பானவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றார்.

சீபில்டு மாரியம்மன் திருக்கோவில் விவகாரம் நீண்ட காலமாகவே சர்ச்சையில் இருப்பதை நாம் தொடர்ந்து பார்த்து வந்தாலும், இந்த நிலம் தமிழர் கோவிலுக்கான நிலம் இதை சுமூகமாக தீர்த்து பெறுவதே காலத்தின் தேவை, ஆனால் இந்த கோவில் நிர்வாகத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் மற்றும் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் மிரட்டலை விடுக்கும் வகையிலான நேற்றைய நடந்த சம்பவம் அமைந்துள்ளதாக திரு. தமிழ்வாணன் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, நேற்று  நடந்த இந்த சம்பவத்தை சிலர் சமுக வலை தளங்களிலும்,  சுபாங் காவல்துறை அதன் முகநூலில் இது தமிழர்களிடையே இரு கும்பல்களிடையே நடந்த மோதல் என்று  திரித்து எழுதியிருப்பது நீதிக்கு புறம்பாக நடந்து கொள்ளும் போக்காகும்.

காவல்துறையினர்கள் நம் பதுகாவலாளர்கள் , அதனால்தான் காவல்துறை இனம் மதம் என்ற பேதமில்லாமல் பின்பற்றாமல் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் . சீபில்டு மாரியம்மன் திருக்கோவிலில் தமிழர்களிக்குடையே நடந்த இரு கும்பல் மோதல் அல்ல, மாறாக வேற்றின கும்பல் நுழைந்து நடத்திய அட்டகாசம் என்றார் திரு. தமிழ்வாணன்.

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும், சம்பந்தபட்டவர்களை அடையாளம் கண்டு நீதிக்கு முன்பு காவல் துறை நிறுத்த வேண்டும்.

நமது புரட்சி கவிஞர் பாரதிதாசன் சொன்னது போல, “பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால், சங்காரம் நிசமென சங்கே முழங்கு” என்பதை போல , மலேசிய தமிழர்களுக்கு தொடர்ந்து சிக்கல்கள் வருவதை நாங்கள் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்க முடியாது, தான் பிறந்த பெருமைமிகு இனத்திற்காக போராட சற்றும் அஞ்ச  மாட்டோம் என மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும், பெத்தாலிங் செயா மண்டல ஒருங்கிணைப்பாளருமான திரு.  தமிழ்வாணன் முத்தையா நினைவுறுத்தினார் .