எம்ஏசிசி அதன் முன்னாள் தலைவரிடம் இன்று விசாரணை

எம்ஏசிசி முன்னாள் தலைவர் சுல்கிப்ளி அஹமட் இன்று புத்ரா ஜெயாவில் உள்ள ஊழல்தடுப்பு ஆணையத் தலைமையகத்துக்கு வந்திருந்தார்.

1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சுல்கிப்ளி காலை மணி 10.25க்கு புத்ரா ஜெயா அலுவலகம் வந்தபோது அமைதியாகக் காணப்பட்டார். ஊடகவியலாளர்களை நோக்கிக் கை அசைத்தவாறு அலுவலகத்தினுள் அவர் சென்றார்.

2016 பிப்ரவரிக்கும் மார்ச்சுக்குமிடையில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதன் தொடர்பில் தலைமைக் கணக்காய்வ்வாளர் மதினா முகம்மட் வெளியிட்ட அறிக்கையில் சுல்கிப்ளியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

அவர் அந்த ஆண்டு ஆகஸ்டில்தான் எம்ஏசிசி தலைவர் ஆனார், ஆனாலும், மாற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட காலக் கட்டத்தில் அவர் சட்டத்துறைத் தலைவர் அலுவலக(ஏஜிசி)த்தின் ஓர் அதிகாரியாக இருந்தார்.

மதினாவின் அறிக்கையின்படி 2016 பிப்ரவரி 24-இல் ஒரு கூட்டம் நடந்திருக்கிறது 1எம்டிபி கணக்கறிக்கையில் மாற்றங்களும் திருத்தங்களும் செய்யுமாறு பணிக்கப்பட்ட அக்கூட்டத்தில் ஏஜிசி பேராளர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ஏஜிசி அதிகாரிகளில் ஒருவர் என்ற முறையில் சுல்கிளி, 1எம்டிபி-யுடன் தொடர்புள்ள ரிம2.6 பில்லியன் மோசடி விவகாரத்தில் அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எந்தத் தவறும் இழைக்கவில்லை என்று முன்னாள் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அறிவித்த செய்தியாளர்ர் கூட்டத்திலும் இருந்திருக்கிறார்.