ஹிண்ட்ராஃப் எழுச்சி நாளில் நாடெங்கும் ஒற்றுமை தீபம் ஏற்றப்பட்டது

ஹிண்ட்ராஃப் எழுச்சி நாளில் நாடெங்கும் ஒற்றுமை தீபம் ஏற்றப்பட்டது என்று ஹிண்ட்ராஃப் தேசியச் செயலாளர்  முனியாண்டி பொன்னுசாமி தெரிவித்தார்.

 உலக அரசியல் வரலாற்றில் மலேசியாவிற்கென்று குறிப்பிடத்தக்க சிறப்புகள் பல உண்டுஅவற்றுள்பல இன மக்களாக வாழ்ந்தாலும் மலேசியர்கள் உயர்த்திப் பிடிக்கும் ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.  அடுத்ததாகஒரே கூட்டணியே தொடர்ந்து அறுபது ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்ததைக் குறிப்பிடலாம்இப்போது அந்த ஆட்சி அகற்றப் பட்டு விட்டாலும் அதன் அடித்தளத்தை அசைத்துப் பார்த்த நாள்தான் நவம்பர் 25-ஆம் நாள் என்று ஹிண்ட்ராஃப் கெடா மாநிலத் தலைவருமான முனியாண்டி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 2008 மார்ச் 8-ஆம் நாள் நடைபெற்ற நாட்டின் பன்னிரண்டாவது பொதுத் தேர்தலின் மூலம்முதன் முறையாக தேசிய முன்னணி ஆட்சியை ஆட்டம் காண வைத்ததற்கு அடித்தளமாக அமைந்தது அதற்கு மூன்று மாதங்களுக்கு முன் தலைநகரையை உலுக்கிய ஹிண்ட்ராஃப் எழுச்சிப் பேரணி ஆகும்.

 2007 நவம்பர் 25-ஆம் நாளில் இலட்சக் கணக்கானோர் திரண்ட அந்த எழுச்சிப் பேரணியின் 11-ஆவது ஆண்டு எழுச்சி தினமாக இந்த ஆண்டும் நாடெங்கும் கொண்டாடப்பட்டதுஇதன் தொடர்பில் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் சார்பில் முக்கியமான வழிபாட்டு தலங்களில் தேசிய நிலையில் ஒற்றுமை தீபம் ஏற்றப்பட்டது என்று முனியாண்டி மேலும் தெரிவித்தார்.

 

  • நக்கீரன்