ஐசெர்ட் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ள 170கிமீ சைக்களில் வந்தவர், நஜிப் நெகிழ்ந்து போனார்!

 

கோலாலம்பூரில் நடைபெறும் ஐசெர்ட் எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்பதற்காக ஒரு 52-வயது ஆடவர் கம்பாரிலிருந்து கோலாலம்பூருக்கு சைக்கிளிலில் புறப்பட்டார்.

சமயத்திற்காகவும் இனத்திற்காகவும் நாட்டிற்காகவும் தாம் இந்த 170 கிலோ மீட்டர் பயணத்தை மேற்கொண்டதாக அபிட்ஸுல் அரிப்பின் என்ற அந்த நபர் கூறினார்.

நான் எனது இலக்கை அடைகிற வரையில் எனது பயணத்தை சுலபமாகவும் எனது மனஉறுதியை வலுவாக்கவும் அல்லாவிடம் வேண்டிக் கொண்டேன் என்றாரவர்.

அபிட்ஸுல் கம்பாரிலிருந்து நேற்று காலை மணி 4.00-க்கு கிளம்பினார். அவரின் முயற்சி பலரின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது, முன்னாள் பிரதமர் நஜிப் உட்பட.

நான் நெகிழ்ந்து போனேன். நாளை நாம் சந்திப்போம் என்று நஜிப் அவரது முகநூலில் நேற்று பதிவு செய்தார்.