வேதாவுக்குப் பதிலாக, வேறொரு இந்தியத் தலைவர் ஒற்றுமை அமைச்சராக நியமிக்கப்படுவதைப் பாஸ் ஏற்றுக்கொள்ளும்

பொ வேதமூர்த்திக்குப் பதிலாக, தனது கடமைகளைச் சிறந்த முறையில் செய்யக்கூடிய ஓர் இந்தியத் தலைவரை, ஒற்றுமை துறையமைச்சராக நியமித்தால், அதில் பாஸ்-க்குப் பிரச்சனை ஏதும் இல்லை.

வேதமூர்த்தி பதவி விலக வேண்டுமென தாங்கள் வலியுறுத்துவது, இனப் பாகுபாட்டினால் அல்ல, மாறாக அவரது பணியை அவர் திறம்படச் செய்யத் தவறியதாலேயே என்று பாஸ் தலைமைச் செயலாளர் தக்கியுட்டின் ஹசான் கூறினார்.

“வேறு இனத் தலைவர், அப்பதவியில் இருந்து, தனது கடமையைச் சரிவர செய்யவில்லை என்றாலும், நாங்கள் அவரைப் பதவி விலகச் சொல்லி வலியுறுத்துவோம்,” என அவர் சொன்னார்.

“வேதமூர்த்தியால் ஒற்றுமையை உருவாக்க தேவையான ஒன்றைக் கட்டமைக்க முடியவில்லை. டாக்டர் மகாதிர் போதுமான மதிப்பீட்டை வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 300,000-க்கும் அதிகமான மக்கள் (பெட்டிசனில் கையெழுத்திட்டவர்கள்) அவர் தோல்வி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆக, இது இனப் பிரச்சனை அல்ல.”

“நாங்கள் இனவாதிகள் அல்ல, அதே நேரத்தில் இனவாதப் பிரச்சினைகளை ஒரு தரப்பினர் எழுப்பினால், அதில் நாங்கள் உடன்படமாட்டோம். ஒற்றுமை அமைச்சராக அவர் தோல்வி அடைந்துவிட்டார், எனவே அவர் இராஜினாமா செய்ய வேண்டும், மற்ற இந்தியத் தலைவர்கள் அப்பதவிக்கு வருவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை,” என்றார் அவர்.

-ஃப்ரீ மலேசியா டுடே