தமிழர்களால்தான் மலேசியாவில் தமிழ்க் கல்விக்கு பாதிப்பு !

அரப் மொழி நாட்டின் மூன்றாம் நிலையாகும் திட்டத்தில் கல்வி அமைச்சர் ஏதோ புது திட்டம் பற்றி வாயசைத்துள்ளர்.

ஆண்டுக்கு ஏறக்குறைய 20 ஆயிரம் இண்டிய மாணவர்கள் தேசியப்பள்ளிகளில் வசமாகும் வேளையில் சீனப்பள்ளி மோகமும், அனைத்துலக பள்ளிகளின் கணக்கு நமக்குத் தெரியவில்லை!

இதற்கிடையில் மூசான் முருங்கை மரம் ஏற பிரதமரும் கல்வி அமைச்சரும் முன்பு முடங்கிய அறிவியல் கணிதப்பாடங்கள் தமிழ்ப்பள்ளிகளில் புகுத்த பல சூனியங்களை சுத்தலாட்டமாக ஆடுகின்றனர்.

இண்டிய தமிழ் மாணவர்களிடையே தமிழ்க் கல்வி தடைப் பட நாம் எங்கே கோட்டை விட்டோம்?

மலேசிய கல்விக்கான திட்டம் தமிழ்ப்பள்ளிகளில் வெற்றிப் பெற்றாலும், தேசியப் பள்ளிகளில் படிக்கும் தமிழ் மாணவர்களை நாம், நம் தமிழால் காப்பாற்ற தவறி விட்டோம் என்பதை மறுக்க யாருமில்லை!

தமிழ் பொது இயங்களும், ஏன் தமிழ் அறவாரியம் கூட தொடக்க தேசிய மற்றும் இடை நிலைப் பள்ளிகளிகளில் தமிழ் மாணவர்களை மறந்து விட்ட நிலை தமிழ் துரோக செயலாகவே படுகிறது.

ஏன்….. ?

நாட்டில் அனைத்து தர பள்ளிகளிலும் தமிழ் மாணவர்கள் மிக எளிமையாகக் குறைந்த நாட்களிலேயே தமிழ் படிக்க வழி உண்டு. ஆனால் கல்வி அமைச்சோ தமிழ்த் துறை கல்வி அதிகாரிகளோ தமிழ்க் கல்வி வளர ஆய்வுகள் செய்யும் அதிகாரமில்லாமல் அரசு, அரசியல் தமிழ்க்கல்வி பொறுப்பாளர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் உண்மை.

பாரிசான் அரசு காலத்தில் அந்த நிலை என்றால், பாக்காத்தான் காலத்திலும் சரியான “தமிழ் தலைவர்” ஆளில்லா ஆளுமையில்லநிலைதான் “மாற்றம்”மில்லா எமாற்றமாகவே உள்ளது.

முன்னோடிகளாக இருக்க வேண்டிய பெரிய, பெரிய தமிழ்த்துறை அதிகாரிகள் ஆபீசில் அரசு அரசியல் பிரதி நிதிகளாக ஒப்புக்கு ஊஞ்சல் குருவிகளாக வேடிக்கை பார்ப்பதோடு முடியாமையால் புகைக்கின்றனர்.

கேட்டால் “அந்த அளவுக்கு கல்வி இலாகாகளில் தமிழ் பிரிவுகளுக்கு இயக்குநர்கள் பதவிக்கு கூட வக்கில்லாமல் இருக்கின்றனர்”

ஒர் இனத்தை, சமயத்தை,ஏன் இந்துத்துவத்தைக் கூட அடையாளம் காட்டிய மொழி போராட்டத்திற்கு வராதவர்கள் கோவில் சிக்கல், பள்ளி கட்டட சிக்கல், நில சிக்கல், தோட்ட நில சிக்கல், ரோடு சிக்கல், பெரு நாட்கள் அரிசி பருப்பு, சிக்கல். என்று பண சலுகை சமுதாயமாக குறிப்பா 70% தமிழர்கள் இன்னும் இருட்டில் சுதந்திர உரிமையில் போராட்டமின்றி உள்ளோம்.

அப்படியே போராட வாருங்கள் என்றால் கதவடைத்து ஜன்னல் வழி பார்க்கும் ஆசாமி ஆசான்களும் நம்மிடையே உண்டு என்பதுதான் அவமானம்.

மொழிக்கு தமிழ் கல்வி உரிமைக்கும் தயங்கும் கல்வி அரசியல் சமுதாய தலைவர்களை நாம் கொண்டுள்ளோம் என்பதுதான் தலைவிதி துக்கச் செய்தியாம்.

ஒரு சமுதாயத்தின் அறிவுக்கண்களை திறந்து விட வேண்டிய ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் “கல்விக்கண்” பொறுப்புகளை அடையாளம் காணும் தார்மிக இந்த சமுதாயத்தில் அக்கால ஆசான்கள் இன்று இல்லை!

மலாய், சீன இன ஆசியர்கள் போல் தம் தாய் மொழி மேம்பாட்டிற்கு அரசு, அரசியல் ஆளுமையை நேரில் தராவிட்டாலும் மொழியியல் விழிப்பு சீர்திருத்த வாத்தியார்களாக உருமாறி பங்காற்றுகிறார்கள் என்பதை மறுக்க இயலாது.

நாட்டில் குறைந்தது 5 ஆயிரம் ஒய்வுப்பெற்ற தமிழ் ஆசிரியர்கள் இருக்கலாம்.

சமீபத்தில் மனித வள அமைச்சர் ஒரு அருமையான ஆலோசனையை முன் வைத்தார். 60 வயது தாண்டிவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றார். இவர்களுக்கு கீழ்க்காணும் பணிகள் தந்தால் தமிழ் மொழி உருப்படும்.

1) படித்தல் – தமிழில் எழுதியதைப் பிழை இல்லாமல் படிக்கப் பயிற்சி தருதல்.

2) புரிதல் – படிப்பதைப் புரிந்துகொண்டு, தங்கள் சொந்த நடையில் சொல்லுதல்.

3) பேசுதல் – சூழலுக்கு ஏற்றவாறு பிழை இல்லாமல் பேசுதல்.

4) படைத்தல் (எழுதுதல்) – சூழலில் காணுவதைப் பதிவு செய்தல், சூழலில் நடந்த, நடக்கிற, நடக்க வேண்டிய தமிழியச் செயற்பாடுகளைப் பதிவு செய்தல்.

5) பண் இசைப் பயிற்சி.

தமிழ் கற்பித்தல் என்பது மேலுள்ள ஐந்து படிநிலைகளில் அமையும். படித்தலுக்கான காலம் ஒவ்வொரு நிலைக்கும் மூன்று மாதங்கள் போதும் என்றாலும், படிப்பவரின் சூழ்நிலை கருதி வேண்டுகிற காலம் எடுத்துக் கொள்ளலாம்.

கற்பிக்க விரும்புபவர்கள் ஆசிரியராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. விருப்பமும், நேரமும் இருந்தால் போதும். ஒரு மணி நேரத்தில் தொலைபேசி சமூக ஊடக வழியாகக் கூட உங்களை ஆற்றல் உள்ள ஆசிரியராக மாறலாம்.

உலகத் தமிழர்களைத் தமிழ் படிக்க அழைப்போம்.
குறைந்த நாட்களில் – எளிமையாகத் தமிழ் படிக்க வழி அமைப்போம்.

ஒரு வழியாக பாக்காத்தான் அரசின் வழி MITRA அமைந்து விட்டது. 50 மில்லியன் தமிழ்க் கல்விக்கும் 100 மில்லியன் சமூக மேம்பாட்டுக்குமாக கேள்விப் பட்டோம். செடிக்கில் 2 பில்லியன் போன இடம் தெரியவில்லை.அப்படி புழுதியில் புகை பிடிக்காமல் கல்விக்கு 150 மில்லியனை செலவு செய்தால் தமிழ் சமுதாயம் பாக்காதானால் உருப்படும்.

இப்போ சீ பீல் கோயிலுக்கு போராடும் தொண்டர்கள், தமிழ்ப்பள்ளி, தமிழ் மொழி ஆபத்திலும் அணித்திரள வேண்டும்.இதுவே தெய்வத்தை காட்டும் நம் இன மான, மொழி , விழி நீர் சோகம் !

-பொன் ரங்கன்
தமிழ்க்கல்வி ஒன்றியம் மலேசியா.