சீக்கியர்களிடம் காங்., மன்னிப்பு கேட்கணும்: மோடி

சண்டிகார்: மத்தியபிரதேசத்தில் கீக்கியர்கள் கொல்லப்பட்ட புகாரில் குற்றம் சுமத்தப்பட்டவரை காங்., முதல்வராக்கியுள்ளது. இதற்கு சீக்கிய மக்களிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பஞ்சாபில் ஆட்சியில் அமர்ந்ததும் விசாயிகள் கடனை ரத்து செய்வோம் என கூறிய காங்கிரஸ் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அரைகுறையாக தள்ளுபடி செய்திருக்கிறது.

1984ல் நடந்த கலவரத்தில் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பா.ஜ., தலைமையிலான அரசு சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்தது. ஆனால் காங்கிரஸ் இதில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்று முயற்சிக்கிறது. சமீபத்தில் சஜ்ஜன்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கீக்கியர்கள் கொல்லப்பட்ட புகாரில் குற்றம்சுமத்தப்பட்டவரை காங்., மத்திய பிரதேச முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சீக்கிய மக்களிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பாகிஸ்தானுடன் உறவு

பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத்சிங் யாருக்கும் தெரியாமல் பாகிஸ்தானுக்கு சென்று வருகிறார். இதில் இருந்தே அவர்கள் பாகிஸ்தானுக்கு எவ்வளவு நெருக்கம் என்று மக்கள் புரிந்து கொள்வார்கள். பாகிஸ்தானை அரசியல் காரணங்களுக்காக மட்டுமே காங்கிரஸ் விமர்சிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

-dinamalar.com

TAGS: