பிரபாகரன் பற்றி பேச டுபாக்கூர் சுமந்திரனுக்கு என்ன தகுதி இருக்கிறது?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை என்றும் அதனால்தான் அரசியல் தலைவர்களை அவர் கொன்றாராம் என்று திருவாய் மலர்ந்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து பேச சுமந்திரனுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்பதே எமது முதலாவது கேள்வியாகும்.

எமது தேசிய தலைவர் பிரபாகரன், ஈழத் தமிழ் மக்களின் முகவரி. அடையாளம், குரல். அவர் இல்லாவிட்டால் இன்று சிங்களவன் எம்மை முற்று முழதாக அழித்திருப்பான். சிங்கள இனவாத அரசின் இன அழிப்புக்கு எதிராக விடுதலைப் புலிகள் இயக்கம் நடாத்திய போராட்டம்தான் எமக்கு அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தது. இன்று உலகில் நாம் ஈழத் தமிழர்கள் என்று சொல்வற்கும் தலை நிமிர்ந்து நடப்பதற்கும் தலைவன்தான் வழி வகுத்தார்.

தமிழீழ தேசியத் தலைவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதே ஜனநாயகத்தை வெளிப்படுத்தவே. அந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டே சுமந்திரன் போன்ற டுபாக்கூர்கள் எம்பியாக உள்ளனர். அது சுமந்திரனுக்கு தெரியாதா? இல்லை சிங்களவனுக்கு கால் நக்குவதற்காக இப்படிப் பேசுகிறாரா? ஏனென்றால் சுமந்திரன் இப்போது பேசுவது எல்லாமே சிங்கள அரசுக்கு சேவகம் செய்வதற்கான பேச்சுக்களே ஆகும்.

தமிழீழத் தேசிய தலைவரையோ, விடுதலைப் புலிகள் இயக்கத்தையோ இன்றுள்ள தமிழரசுக் கட்சிினர் பலருக்கு தெரியாது என்று வடக்கு மாகாண சபை முன்னாள் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் கூறியுள்ளதுதான் உண்மையாகும். அடுத்த திருடன் சயந்தன். அந்த அற்ப பிறவிக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றி என்ன தெரியும்? சுய ஒழுக்கமற்ற அந்த நபர், வேண்டுமானால் கூட்டமைப்பை விட்டு வெளியில் சென்று தனியாக நின்று வென்று காட்டலாமே? இது சுமந்திரனுக்கும் பொருந்தும்.

அது சரி, நீங்கள் பாராளுமன்றப் பதவிகளில் இருந்து என்ன கிழித்தீர்கள்? புதிய அரசியலமைப்பு கொண்டு வருகிறோம். சமஷ்டி என்ற பெயர் இல்லாமே, சமஷ்டி பெறுகிறோம் என்று வாய் கிழிய கத்தினீர்கள். சமஷ்டி பெற்றுத் தருவோம் என்று கூறி எம்பியாக பதவி பெற்று சுகபோகங்களை அனுபவிக்கிறீர்கள். ஆனால் இதுவரையில் நீங்கள் சாதித்தது என்ன? ஒவ்வொரு தீபாவளிகை்குத் தீர்வு என்று காலத்தை கடத்தியதுதான் மிச்சம்.

சுமந்திரன் செய்த ஒரே நற்காரியம் என்ன தெரியுமா? ரணில் அரசை காப்பாற்றியதுதான். அதற்காக மகிந்தவை மீண்டும் பிரதமர் ஆக்குமாறு சொல்லவில்லை. ரணில் விக்கிரமசிங்காவை பிரதமர் ஆக்குவதில் கடும் ஊக்கமும் ஆக்கமும் கொண்டு செயற்பட்டீர்கள். வென்றீர்கள். நல்லதுதான். ஆனால் இதே ஆர்வத்தை கேப்பாபுலவு மக்களின் நில விடுதலையிலோ, அல்லது அரசியல் கைதிகளின் விடுதலையிலோ காட்டவில்லை என்பதுதான் தமிழ் மக்களின் வருத்தம்.

சரி, இலங்கை நல்ல நீதியான நாடு. மைத்திரிக்கு எதிராகவே தீர்ப்பு சொல்லுறினம். மகிந்தவுக்கு எதிராய் தீர்ப்பு சொல்றினம். ஆனால், தமிழ் மக்களுக்கு காலம் காலமாக நடந்த இன அழிப்புக்கு முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைக்கு என்ன தீர்ப்பு சொல்லுவினம்? அதற்கும் நீங்கள் எல்லாம் கறுப்பு அங்கிகளை அணிந்து கொண்டு நீதியைப் பெற்றுத் தரலாமே?

எமக்கு எதிரான இனப்படுகொலையாளியான மகிந்த ராஜபக்சவை, இனப்படுகொலை குற்றத்திலிருந்து சர்வதேசத்திடமிருந்து காப்பாற்றிய ரணிலை, நீங்கள் காப்பாற்றுவதும் மைத்திரி மற்றும் மகிந்தவை காப்பாற்றுவதும் ஒன்றுதான் பெரிய வேறுபாடு இல்லை. ஏனென்றால் மகிந்தவின் நிலைப்பாட்டியிலேயே மைத்திரியும் ரணிலும் உள்ளனர். மைத்திரி மகிந்தவுக்கு பிரதமர் பதவி கொடுத்தார். நாளை ரணில், மகிந்தவுக்கு ஜனாதிபதி பதவி கொடுக்கலாம். அதுதான் சிங்களம்.

அத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பில்ல, சமஷ்டி இல்லை, அதெல்லாம் என்னை கொன்றாலே சாத்தியம் என்று மைத்திரி சொல்கிறார். ஒற்றையாட்சி தான் தீர்வு, ஒருமித்த நாடில்லை, பௌத்திற்கு முன்னுரிமை என்று ரணிலும் லக்ஸ்மன் கிரியல்லவும் கூறுகின்றனர். பிறகெதற்கு புதிய அரசியலமைப்பு? உலகத்தை ஏமாற்றவா? ஈழத் தமிழர்களை ஏமாற்றவா? இவர்களுடன் சேர்ந்து நீங்களும் தமிழர்களை ஏமாற்றுகிறீர்கள்.

இப்படி எல்லாம் அநியாயத்திற்கு மேல் அநியாயமும் துரோகத்திற்கு மேல் துரோகமும் செய்துகொண்டு, புலிகளைப் பற்றியும், பிரபாகரன் பற்றியும் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? இதையே அடுத்த தேர்தலில் பேசிப் பாரும். மக்கள் வழங்கும் பதிலடி புரியும்.

-eelamnews.co.uk

TAGS: