ஏமனில் அமெரிக்க வான்தாக்குதல்: அல்-கொய்தா தளபதி பலி

வாஷிங்டன்:அமெரிக்க கடற்படையை சேர்ந்த ‘யுஎஸ்எஸ் கோல்’ என்ற போர்க்கப்பல் கடந்த 2000-ம் ஆண்டு ஏடன் துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பும் போது அல்-கொய்தா தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் கடற் படைவீரர்கள் 17 பேர் உயிரிழந்தனர். 39 பேர் காயம் அடைந்தனர். ஏமனை சேர்ந்த அல்-கொய்தா தளபதியான ஜமால் அல்-படாவி என்பவர் இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

அமெரிக்கா போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த 1-ம் தேதி ஏமனில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் ஜமால் அல்-படாவி கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது.

அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், “யுஎஸ்எஸ் கோல்’ போர்க்கப்பல் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த நமது கதாநாயகர்களுக்கு நம்முடைய ராணுவம் நீதியை வழங்கிவிட்டது என்றார்.

-dinamalar.com