‘இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படும்’

சிரியாவிலிருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறுவது தாமதிக்கப்பட்டால், சிரியாவிலுள்ள குர்திஷ் ஆயுதக்குழுக்கள் மீது படை நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கப் போவதாக, துருக்கி எச்சரித்துள்ளது.

சிரியாவிலிருந்து வெளியேறுவதாக ஐ.அமெரிக்கா அறிவித்த போதிலும், அங்குள்ள குர்திஷ் போராளிகளின் பாதுகாப்புத் தொடர்பான கேள்விகள் ஏற்பட்டுள்ளன. எனவே, குர்திஷ் போராளிகளின் பாதுகாப்பை, துருக்கி உறுதிப்படுத்தினாலேயே, வெளியேற்றம் நடைபெறுமென, ஐ.அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, இது தொடர்பில் எச்சரிக்கையை வெளியிட்டுள்ள துருக்கி வெளிநாட்டு அமைச்சர் மெவ்லுட் கவுசொக்லு, ஐ.அமெரிக்க வெளியேற்றம் தாமதமானால், இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவித்தார்.

-tamilmirror.lk