‘பெட்ரோல் காசு’ கொடுத்த பெண்ணிடம் எம்ஏசிசி விசாரணை

கேமரன் மலை இடைத் தேர்தல்: ஒரு புகைப்படத்தில், பக்கத்தான் ஹரப்பான் டி-சட்டை அணிந்து கட்சித் தொண்டர்களுக்குப் பணம் கொடுப்பதாகக் காணப்படும் பெண்ணிடம் எம்ஏசிசி வாக்குமூலம் பதிவு செய்தது.

அப்பெண் நேற்றிரவு ஏழு மணி தொடங்கி மூன்று மணி நேரம் தானா ராத்தா எம்ஏசிசி நடவடிக்கை மையத்தில் இருந்தார் என ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டி அஸ்ட்ரோ அவானி கூறியது.

அப்பெண் ஊடகங்கள்டம் பேச மறுத்தார்.ஊடகங்கள் அணுகியபோது அவர் முகத்தை மூடி மறைத்துக் கொண்டார்.

அவர் பணம் கொடுக்கும் படம் வைரலானதும் கேமரன் மலை வேட்பாளர் எம்.மனோகரன் உள்பட பல தலைவர்களும் அது கட்சித் தொண்டர்களுக்கு அவர்கள் பெட்ரோலுக்குச் செலவு செய்த பணம் திருப்பிக் கொடுப்பதைக் காண்பிக்கும் ஒரு படம் என்றனர்.

அது தேர்தல் சட்டத்தை மீறுவதாகாது என்று அத்தலைவர்கள் கூறினர்.

அதை முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதை ஏற்கவில்லை. அவர் கேமரன் மலை தொகுதி காலியானதாக தீர்ப்பளித்த நீதிபதி அசிசா நவாவி, பெட்ரோலுக்குப் பணம் கொடுப்பதும் ஒரு வகை ஊழலே என்று கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.