கல்வி அமைச்சு: செம்ஞ்யில் பள்ளி கட்டுவதற்கு அங்கீகாரம் கொடுத்தது ஹரப்பான்

செமிஞ்யில் புதிய தொடக்கநிலைப் பள்ளி ஒன்று கட்டப்பட்டு வருவதாகவும் அடுத்த ஆண்டு அக்டோபரில் அது கட்டி முடிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்தது.

எஸ்கே தாமான் பெலாங்கி என்ற பெயரைக் கொண்ட அப்பள்ளியைக் கட்டுவதற்கு புதிய ஹரப்பான் அரசாங்கம் கடந்த அண்டு அக்டோபரில் அங்கீகாரம் அளித்தது என்று அமைச்சர் மஸ்லி மாலிக் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறியது. ரிம20.7 மில்லியன் செலவில் கட்டப்பட்டு வரும் அப்பள்ளி 24 வகுப்பறைகளைக் கொண்டிருக்கும்.

“2018 அக்டோபர் 22-இல் கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டன. 2020, அக்டோபர் 22-இல் அது கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“2012-இலிருந்து தாமான் பெலாங்கி குடியிருப்பாளர் சங்கம் அங்கு பள்ளி கட்டுவதற்குப் போராடி வந்தது.

“பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதன் முயற்சிக்குப் பலன் கிடைத்தது. 2018 அக்டோபரில் பள்ளி கட்ட அங்கீகாரம் கிடைத்தது”, என்றந்த அறிக்கை கூறிற்று.

செமிஞ்யி இடைத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் ஐந்து நாள் உள்ள வேளையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.