அனுவார் மூசா: என்இபி போன்ற கொள்கை இனி தேவையில்லை

“மலாய்க்காரர்களுக்கு மட்டுமே” உதவும் புதிய பொருளாதாரக் கொள்கை (என்இபி) போன்ற ஒன்றைத் திரும்பக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை, அதற்குப் பதிலாக எல்லா இனங்களுக்கு உதவும் கொள்கையைக் கொண்டுவரலாம் என்கிறார் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா.

அரசாங்கம் இனவேறுபாடின்றி எல்லா இனத்தவருக்கும் உதவக் கடமைப்பட்டுள்ளது என்றாரவர்.

“நீங்கள் மலாய்க்காரரா சீனரா, எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பார்த்து எதையும் தீர்மானிக்கக் கூடாது கொள்கைகளை வகுக்கவும் கூடாது.

“ஏழை இந்தியரா, ஏழை சீனரா அவர்களுக்கும் உதவுவது அரசாங்கத்தின் கடமை”, என அனுவார் மலாய் மெயில் நேர்காணல் ஒன்றில் கூறினார்.

இன்னொரு முறை ஆட்சிக்கு வரும் வாய்ப்பு பிஎன்னுக்குக் கிடைக்குமானால் என்இபி-யை அது திரும்பக் கொண்டுவராது என்று அந்த அம்னோ எம்பி கூறினார்.