3 மணி நேரமா நின்று 2.0 பார்த்தேன்: ரஜனியின் வேலைக் காரியை பாருங்கள் இது தான் இவர்

ரஜனிகாந்த் அவர்களே! உங்கள் வீட்டில் உள்ள அரசியல் சிஸ்டம் மிக மோசமாக உள்ளது. முதலில் அதை சரிப் படுத்தி விட்டு வெளி அரசியலில் குதித்திருக்க வேண்டும். நீங்கள் தியேட்டரில் குடும்பத்துடன் படம் பார்க்கும் போது கூட வீட்டுப் பணிப் பெண்ணை அருகில் அமர வைக்காமல் பின்னால் நிற்க வைத்து பணக்காரத் திமிரை வெளிப்படுத்தி உள்ளீர்கள். பொது இடத்தில் இப்படியான நிலமை என்றால், வீட்டில் எப்படி ? நடந்து கொள்வீர்கள் என்று எதிர்பார்க்க முடிகிறது.

நீங்கள் ஒரு புதுப் பணக்காரர் என்பது ஊருக்கே தெரியும். சினிமாவுக்கு வருவதற்கு முன்னர், ஒரு பஸ் கண்டக்டர் வேலை செய்து வந்த காலத்தில், இந்தப் பணிப்பெண்ணின் நிலையில் தான் நீங்களும் இருந்தீர்கள். சினிமா நட்சத்திரமாக கோடி கோடியாக பணம் சம்பாதித்த பின்னர் முன்பு ஏழையாக இருந்த காலங்களை மறந்து விட்டிருப்பீர்கள்.

ரஜனி அவர்களே, தற்போது நீங்கள் வாழும் வர்க்கம் வேறு. உங்கள் மகளை ஒரு தொழிலதிபருக்கு கட்டிக் கொடுத்துள்ளீர்கள். பணக்காரர்கள் மட்டுமே உங்கள் நண்பர்கள். இப்போது ஏழைகள் இருப்பதும், அவர்களது கஷ்டமும் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. இந்த நிலைமைக்கு காரணம், நீங்கள் சொல்லும் அதே “சிஸ்டம் சரியில்லை” என்பது தான்.

-athirvu.in