ஆஸ்கர் விருது வாங்கிய படத்துக்கு சொந்தக்காரரான தமிழன்!

உலகம் முழுவதில் சினிமாவுக்காகான மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுவது ஆஸ்கர் விருது தான்.

கடந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருது இன்று வழங்கப்பட்டது. இதில் Period End of Sentence என்ற குறும்படமும் ஆஸ்கர் விருதை வாங்கியுள்ளது.

இந்த குறும்படம் பெண்களின் மாதவிடாய் குறித்து உள்ள பல கட்டுக்கதைகளை உடைக்கும் குறும்படமாகும்.

கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் உருவாக்கிய மலிவுவிலை நேப்கினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த குறும்படம் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தில் எடுக்கப்பட்டது.

இக்குறும்படத்தை ஏற்கனவே விருதுவாங்கிய இரானிய அமெரிக்க பெண் இயக்குனரான Rayka Zehtabchi இயக்கினார்.

இந்த விருதின் மூலம் பெண்கள் மத்தியில் நாப்கின் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும் என்று முருகானந்தம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த கதையை அக்ஷய் குமார் நடிக்க பேட்மேன் என்ற பெயரில் கூட இந்தியிலும் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

-cineulagam.com