ஜம்மு பஸ் ஸ்டாண்டில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி, 32 பேர் காயம்

ஜம்மு: ஜம்மு பஸ் ஸ்டாண்டில் பயங்கரவாதி ஒருவன் வீசிய கையெறி குண்டு வெடித்ததில் ஒருவர் உயிர் இழந்தார். 32 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கையெறி குண்டுவீசிய பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர்.

காஷ்மீரில் சமீப காலமாக வன்முறை அதிகரித்து வருகிறது. எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சிகள் பாதுகாப்பு படையினரால் முறியடிக்கப்பட்டு வருகிறது. எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறலும் நாள்தோறும் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஜம்மு ரகுநாத் பஜார் பஸ் ஸ்டாண்டில் மக்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த நேரத்தில் ஒரு பஸ்சின் அடிப்பகுதியில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதனை பயங்கரவாதி ஒருவர் வீசி சென்றதாக போலீசார் கூறினர்.

இந்த சம்பவத்தில், மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயர் இழந்தார். 32 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்த இடம் போலீசாரின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குண்டை வீசிய பயங்கரவாதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-dinamalar.com
TAGS: